என் பெயர் ஸ்ரீதரன், சிங்கப்பூரிலிருந்து எழுதுகிறேன். நான் கூறவிருக்கும் இந்த கருத்து இன்றைய தமிழ்நாட்டு பிராமண சமுகத்தின் கருத்தாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்
Category: Feedback
ஐயா,
உங்களின் ஈழத் தமிழ் போராட்டத்துக்கு என்னுடைய ஆதரவு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
என் பெயர் ஸ்ரீதரன், சிங்கப்பூரிலிருந்து எழுதுகிறேன். நான் கூறவிருக்கும் இந்த கருத்து இன்றைய தமிழ்நாட்டு பிராமண சமுகத்தின் கருத்தாக பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். தாய் தமிழ்நாட்டில் இன்றைய நிலை என்னவென்றால்: தமிழ் ஈழம் அமைத்தே தீரவேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் அதே கருத்து தான் என்னுடைய உடன்பிறவா சகோதரர்கள் மாண்டுகொண்டு இருக்கிறார்களே, அதை தாங்க முடியாமல், பல இரவுகள் உறங்காமல் கண்விழ்தும் உண்டு. என்னுடைய இந்த கருத்து என் சொந்த கருது என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன் - என்னுடைய கூட்டாளிகளை சந்திக்கும் வரை. அவர்கள், நல்ல படித்த இளைஞர்கள், வெவ்வேறு நாடுகளில் பணி புரிந்துகொண்டிருக்கும் தோழர்கள். அவர்களின் கருதும் இது தான்: "தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை என்பதுதான். ஆகவே சுயமரியாதையோடு வாழ தமிழனுக்கு, தமிழீழமே வழி." எல்லோரும் கத்தியை தூக்கிகொண்டு சண்டைக்கு போனால் போரில் வெற்றி பெறலாம். ஆனால், ஈழத்தின் நிம்மதி போய்விடும். பிறகு, இடுகாட்டில் தான் ஈழம் கிடைக்கும். எனவே, எனது பங்காக, ஈழத்தை பற்றி அவ்வப்போது, என்னுடைய வலைபதிவுகளில் பதிவேன். இதை படித்த என்னுடைய நண்பர்களில் பலர், "நீ எப்பிடி திடீரென்று இவ்வளவு ஆதரிக்கிறாய் என்று வினா எழுப்பினார்கள். ஆனால், என் பெற்றோருக்கு அதனை காட்டிய போது, அவர்களின் மனதிலும் அதே கருத்து நிலவுவதை அறிந்தேன். ஆகவே, ஈழத்துக்கு ஆதரவு எனது பெற்றோர் காலத்திலேயே இருந்து வருவதை அறிந்தேன். அது ஒரு நல்ல செய்தி என்றும் கருதுகிறேன். ஏனெனில், ஈழத்துக்கு, பிராமணர்கள் எதிரிகள் என்று ஒரு பொய் கருத்து நிலவிவருகிறது - அதில், சற்றே உண்மை உள்ளது. ஆம், சற்றே. ஒரு சிலர் இன்னமும் ஆதரிக்கவில்லை தான். ஆனால், அது மாறிக்கொண்டு இருக்கிறது. அவர்களும், தமிழ் நாட்டில் தானே இருக்கிறார்கள்? அவர்களுக்கும், நெஞ்சுக்குள் ஈரம் இருக்கிறது அல்லவா? ஆகவே, இந்த பாராளுமன்ற தேர்தல், இந்தியாவுக்காக அல்ல, ஈழத்துக்காகவே நடக்கவிருக்கிறது. பிராமணர்கள் உட்பட, எல்லோரின் ஆதரவும் ஈழத்துக்கு இருக்கிற காரணத்தால், பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில், தங்களின் கூட்டணி வெற்றி பெரும் என நம்புகிறேன். தங்களின் முயற்சி தொடர, ஈழம் பெற ஆசை படுகிறேன். இல்லை இல்லை...ஆசை படுகிறோம்.
வாழ்ந்துகொண்டே வளர்ந்துகொண்டிருக்கும் அமுதினும் இனிய என் தமிழ்!!