நெல்லை மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 12 ஊராட்சிகளை திருவேங்கடம் தாலுகhவில் நீடிக்க வலியுறுத்தி செப்டம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு வைகோ தலைமையில் திருவேங்கடத்தில் ஆர்ப்பாட்டம்

Issues: Human Rights, Law & Order, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 01/09/2017

 

 

 


நெல்லை மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தின்
12
ஊராட்சிகளை திருவேங்கடம் தாலுகhவில் நீடிக்க வலியுறுத்தி

செப்டம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு
வைகோ தலைமையில் திருவேங்கடத்தில் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் - குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் 1.முக்கூட்டுமலை, 2.நக்கலமுத்தன்பட்டி, 3.வடக்குப்பட்டி, 4.பிச்சைத் தலைவன்பட்டி, 5.இளையரசனேந்தல், 6.புளியங்குளம், 7.சித்திரம்பட்டி, 8.அப்பனேரி, 9.அய்யனேரி, 10.வெங்கடாசலபுரம், 11.ஜமீன்தேவர்குளம், 12.பிள்ளையார்நத்தம் ஆகிய 12 ஊராட்சி மன்றங்களை நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில்பட்டி தாலுகhவில் இணைப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்து செயல்பட்டபோதே அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தப் பின்னணியில் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, இந்த 12 ஊராட்சிகளும் உள்ளடக்கிய 44 ஊராட்சிகளைக் கொண்ட குருவிகுளம் ஒன்றியம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவேங்கடத்தைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகh உருவாக்கப்பட்டது.

இந்த 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி தாலுகhவில் சேர்க்க வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதனை எதிர்த்து 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் தாலுகhவிலேயே நீடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாக அதே உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதியரசர் கே.கே.சசிதரன், நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் 16.8.2017 அன்று விசாரணைக்கு வந்தது. ஆகÞடு 16 ஆம் தேதி அன்று தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். அதில் பிரச்சினைக்கு உரிய 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி தாலுகhவில் சேர்க்க வேண்டுமா? அல்லது நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருவேங்கடம் தாலுகhவிலேயே நீடிக்க வேண்டுமா? என்று தமிழக அரசு முடிவு எடுத்து செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் விசாரணை அன்று தனது கருத்தை எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்என்று கூறி இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை குறித்து ஆகÞடு 30 ஆம் தேதி அன்று தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்களிடம் பொதுமக்கள் நலனைக் கருதி 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் தாலுகhவிலேயே நீடிக்க வnண்டும் என்பதற்கhன கhரணங்களை விளக்கி நான் கூறியபோது, தலைமைச் செயலாளர் அவர்கள் ஆவன செய்வதாக மிகவும் கனிவாக என்னிடத்தில் பதில் கூறினார்கள். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் இப்பிரச்சினை குறித்து விளக்கமாகக் கூறினேன்.

அதே நாளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு எÞ.பி.வேலுமணி அவர்களிடம் பிரச்சினையை விளக்கமாகக் கூறியபோது, திருவேங்கடம் தாலுகhவிலேயே 12 ஊராட்சிகளையும் நீடிக்கச் செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், ஆகÞட் 31 ஆம் தேதி அன்று பிற்பகலில் அமைச்சர் வேலுமணி அவர்கள், உள்ளாட்சித் துறை நிர்வாக ஆணையர் இதுகுறித்து உங்களிடம் பேசுவார் என்று அவரிடத்தில் அலைபேசியைக் கொடுத்தார். அந்த ஆணையரிடம் நான் பிரச்சினையை விளக்கியபோது, என் கருத்தை மறுத்து, “வருவாய் துறையிலும், hவல்துறையிலும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. கோவில்பட்டி தாலுகhவோடு சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்படி ஆணையிட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறதுஎன்றார்.

நான் அதற்குப் பதிலாக மீண்டும் நெல்லை மாவட்டத்திலேயே இந்த ஊராட்சிகள் நீடிப்பதற்கு வருவாய் துறை, hவல்துறை ஆவணங்களில் திருத்தம் செய்ய முடியாதா? இது என்ன மலையை நகர்த்தும் வேலையா? முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் கhமராஜர் அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் அதிகhரிகள் முட்டுக்கட்டை போட்டபோது, “மக்களுக்கhகத்தான் சட்டமும், விதிகளும்; விதிகளுக்கhக மக்கள் இல்லைஎன்று அதிகhரிகளுக்கு புத்திமதி சொல்லி நிர்வாகத்தை நடத்தினார். உங்களைப் போன்ற அதிகhரிகள்தான் இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறீர்கள். அமைச்சர்களுக்கு தவறான யோசனைகளைக் கூறி, பொதுமக்கள் நலனைக் கhற்றில் பறக்கவிடுகிறீர்க்ள. நான் மக்களைத் திரட்டி அறப்போராட்டம் நடத்துவேன்என்று தெரிவித்தேன்.

அதன்படி செப்டம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருவேங்கடத்தில் என்னுடைய தலைமையில் 12 ஊராட்சிகளும் திருவேங்கடம் வட்டத்திலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி அறப்போராட்டம் நடைபெறும். அதில் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.


தாயகம்                                                                             வைகோ
சென்னை - 8                                                            பொதுச்செயலாளர்
01.09.2017                                                                    மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)