நடப்பது மக்கள் கிளர்ச்சி கைதானவர்களை விடுதலை செய்க! வைகோ அறிக்கை
Issues: Environment, Farmers, Human Rights, Law & Order, Politics
Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu
Category: Articles, Headlines, Vaiko Answers
நடப்பது மக்கள் கிளர்ச்சி
கைதானவர்களை விடுதலை செய்க!
வைகோ அறிக்கை
1965 இந்தி எதிர்ப்பு மொழிப்புரட்சிக்குப் பிறகு முல்லைப் பெரியாறு உரிமை காக்கும் போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் கிளர்ச்சியாக பேரெழுச்சியாக உருவாகிவிட்டது. பசியும் பட்டினியுமாக 18 ஆண்டாம் நூற்றாண்டில் தென் தமிழ் நாட்டின் மக்கள் பஞ்சத்தில் உயிர் இழக்க நேர்ந்த கொடுந்துயர் மீண்டும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவே முல்லைப் பெரியாறைக் காக்கப் போராடுகிறோம்.
விவசாயப் பாசனத்திற்கு நீரும், குடிக்கத் தண்ணீரும் ஐந்து மாவட்டங்களில் அறவே இல்லாமல் போய் விடும் பேராபத்து நேர்ந்துவிடாமல் நமது பென்னி குக் அணையை காப்பாற்றித் தீர வேண்டும். கட்சி எல்லைகளைக் கடந்து தெற்குச் சீமை மக்கள் ஆவேசம் கொண்டு போராடுகின்றனர். குறிப்பாக தாய்மார்கள் மிகுந்த கவலையும் ஆத்திரமும் கொண்டுள்ளனர்.
இதன் விளைவாகத்தான், சீலையம்பட்டி விடியல் சேகர் தன்னை மாய்த்துக்கொண்டார். காமராஜபுரம் பாலத்து ராஜா தீக்குளித்து தற்போது சிகிச்சை பெறுகிறார். தேனி பங்களாமேட்டு இளைஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காங்கிரசைக் கண்டித்து நேரு சிலைக்கு முன் தீக்குளித்து, உயிர் ஊசலாடும் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இலட்சக்கணக்கானவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தை அமைதியாகவே மேற்கொள்கின்றனர். எனினும் இத்தகைய கிளர்ச்சியில் ஆவேசம் கொள்கின்ற இளைஞர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாது போய்விடும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மிகச் சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் தமிழக அரசின் காவல்துறை பல இடங்களில் நிலைமையை கவனத்தோடு கையாண்டு வந்தபோதிலும், ஓரிரு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆம். குறிப்பாக 21 ஆம் தேதி கூடலூர் லோயர் கேம்ப்பில் சுருளிப்பட்டி, அனுமந்தம்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர், லோயர் கேம்ப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தடியடிக்கு ஆளாயினர். ஒருசில இளைஞர்கள் ஆத்திரப்பட்ட செயல்களில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் காவல்துறையினர் பலர் மீது தடியடி நடத்தியதுதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
கேரளத்தில் ஆணையை உடைக்க முற்பட்டவர்கள் மீதும், காவல்துறையினரை கடுமையாக தாக்கியவர்கள் மீதும் ஒப்புக்கு வழக்குப் போட்டார்களேத் தவிர, யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை.
இடுக்கி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி எல்லை தாண்டி வந்தால், துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்று திமிரோடு மிரட்டியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
23.12.2011 மறுமலர்ச்சி தி.மு.க

