யானைமலை : ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்! வைகோ - தா. பாண்டியன் பங்கு ஏற்பு!
Issues: Environment, Rural
Region: Madurai - Rural, Tamil Nadu
Category: Headlines, Press Releases
யானைமலை : ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்! வைகோ - தா. பாண்டியன் பங்கு ஏற்பு!
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைந்து உள்ள யானைமலையை உடைத்துச் சிதைத்து, சிற்பக் கலை நகரம் அமைக்க, தமிழக அரசு மேற்கொண்டு உள்ள முயற்சியைக் கண்டித்தும், கேடான இத்திட்டத்தை நிரந்தரமாகக் கைவிட வலியுறுத்தியும், ஒத்தக்கடையில் மார்ச் 4 ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துகின்ற அறப்போராட்டமாக மார்ச் 4 ஆம் தேதி வியாழக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.
அப்போராட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்களும் நானும் பங்கு ஏற்கிறோம்.
இந்தப் போராட்டத்தை, மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் சார்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், இந்தியக் கம்யூனிÞட் கட்சியும் இணைந்து நடத்துகின்றது என தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மதிமுக

