சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் - நேர்காணல் மற்றும் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
Issues: Politics
Region: Tirunelveli - Urban, Tirunelveli - Rural
Category: Articles, Press Releases
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தல் - நேர்காணல் மற்றும்
ஆட்சிமன்றக்குழுக் கூட்டம்
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக்கோரி விண்ணப்பித்து உள்ளோருக்கு நேர்காணல் 19.02.2012 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் 19.02.2012 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை, தாயகத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க.
19.02.2012

