தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் - துணைப்பொதுச்செயலாளர் - ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Announcements

Date: 
Wed, 08/02/2017

 

 

 


தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
பொருளாளர் - துணைப்பொதுச்செயலாளர் - ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள்

போட்டியின்றித் தேர்வு

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரப்பப்பட வேண்டிய கழகப் பொருளாளர் ஒருவர், துணைப் பொதுச்செயலாளர் ஒருவர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் நால்வர் ஆகிய பொறுப்புகளுக்காக தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப மனுக்கள் 06.02.2017 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை பெறப்படும் என்றும், போட்டியிலிருந்து விலகிக்கொள்ள 08.02.2017 புதன்கிழமை மாலை 3 மணி வரைக்கும் கால அவகாசமும் வழங்கப்பட்டது. தேர்தல் இருப்பின் 26.02.2017 கோவையில் நடைபெறும் பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையாளரான கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆ.வந்தியத்தேவன் அவர்களிடம் கழகப் பொருளாளர் பொறுப்புக்காக திரு. அ.கணேசமூர்த்தி அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்காக திரு. ஏ.கே.மணி அவர்களும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கான நால்வருக்கு திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டாக்டர் க.சந்திரசேகரன், திரு. மு.பூமிநாதன், திரு. க.ஜெயசங்கர் ஆகியோர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்ப மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொருளாளர் பொறுப்புக்கு ஒருவரும், துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஒருவரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு நால்வர் மட்டுமே மனு செய்திருந்தனர்.

எனவே, கழகப் பொருளாளராக திரு. அ.கணேசமூர்த்தி அவர்களும்,

துணைப் பொதுச்செயலாளராக திரு ஏ.கே.மணி அவர்களும்,

ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக

திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,

டாக்டர் க.சந்திரசேகரன்,

திரு. மு.பூமிநாதன்,

திரு. க.ஜெயசங்கர்

ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.


தாயகம்                                                                  வைகோ
சென்னை - 8                                              பொதுச் செயலாளர்,
08.02.2017                                                       மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)