மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சு வார்த்தை நடத்திடுக! வைகோ அறிக்கை

Issues: Economy, Human Rights, Poverty

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Tue, 06/02/2018

 

 

 


மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சு வார்த்தை நடத்திடுக!

வைகோ அறிக்கை

க்கள் சிரமம் இன்றி தொடந்து மின் சேவையைப் பெற்றுத் தங்களது அன்றாடப் பணிகளைச் மேற்கொள்வதற்காக மின் வாரியத் தொழிலாளர்கள், அலைந்து திரிந்து பணி ஆற்றுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சுனாமி, சூறாவளி பாதிப்பின் போதும், சமீபத்தில் குமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கிய ஓகி புயலின் போதும் இருளில் மூழ்கிய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே வெளிச்சம் கிடைக்க இரவு பகல் பாராது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய பணியை நாடே பாராட்டியது.

மின்வாரிய தொழிலாளர்களுக்கான 11 ஆவது புதிய ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிற நிலையில், கடந்த 31.01.2017 அன்று மின்துறை அமைச்சர், “வேலைப்பளு காரணமாக தொழிற்சங்கங்களுடன் பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும். எனவே, இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 2500 ரூபாயும், ஓய்வு பெற்றவர்களுக்கு 1250 ரூபாயும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சங்கங்களிடம் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கங்கள், 12 ஆம் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிடில் பிப்ரவரி 16 தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளன.

ஏற்கனவே அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 2.57 காரணியைக் கொண்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்ற தங்களது கோரிக்கையை ஏற்காமல், 2.44 வழங்கிட அரசு உறுதியாக இருந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைவரும் அறிந்ததே!

எனவே தமிழக அரசு, 2.57 காரணியைக் கொண்டு தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்கிற தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மின் வாரியத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் உடனடியாக அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தாயகம்                                               வைகோ
சென்னை - 8                              பொதுச்செயலாளர்,
06.02.2018                                      மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)