மத்திய அரசு ஒருமைப்பாட்டை விரும்புவதாக இருந்தால் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவேண்டும் - வைகோ . தினமலர் செய்தி
Issues: Economy, Farmers, National, Rural
Region: Theni, Tamil Nadu
Category: Headlines
தேனி : "மத்திய அரசு ஒருமைப்பாட்டை விரும்புவதாக இருந்தால் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவேண்டும்'' என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
பெரியாறு அணை பிரச்னையில் கேரளா அரசின் தவறான நடவடிக்கைகளை தடுக்க தவறும், மத்திய அரசை கண்டித்து தேனியில் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமை வகித்து வைகோ பேசியதாவது: தென் தமிழகத்தின் வாழ்வாதாரமாக திகழ்வது பெரியாறு அணை. இங்கிருந்து 999 ஆண்டுகளுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது. இதை தடுக்க கேரளா அரசு பல்வேறு தவறுகளை செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணை போகிறது. ஏற்கனவே தண்ணீர் தேக்கப்பட்டு வந்த 8 530 ஏக்கரில் சில அதிகாரிகள், பிரமுகர்கள் 3 500 ஏக்கரை ஆக்கிரமிப்பு செசய்தததன் விளைவாக, ஐந்து மாவட்டங்களில் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசசாகி விட்டன. 28 ஆயிரம் ஏக்கர் இருபோக நிலங்கள் ஒரு போகமாக மாறிவிட்டன. மேலும் 53 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதி தடைபட்டுள்ளது. ஆண்டு தோறும் 55 கோடி ரூபாய்க்கு விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் 75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியாறு அணை அருகே புதிதாக அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட இடத்தில் நடத்திய ஆய்வில் அணை கட்ட வாய்ப்பு இல்லாததால், மாற்று இடத்தில் அணை கட்ட முயற்சிகொண்டு வருகிறது. கேரளா அரசுக்கு புதிய அணை கட்டுவது நோக்கமல்ல. இதை காரணமாக வைத்துக் கொண்டு, பெரியாறு அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது அந்த அரசின் நோக்கம். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அணையை உடைக்க கேரளா அரசு முயற்சி செசய்தால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பால் உட்பட ஒரு துரும்பு கூட செல்ல முடியாது. எங்கள் எதிர்கால சந்ததி வாழ பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு ஒருமைப்பாட்டை விரும்புவதாக இருந்தால், புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தடுக்க வேண்டும்.இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, நான் ஐந்து மாவட்டங்களிலும் கிராமம் கிராமமாக செசன்று மக்களை திரட்டுவேன். இது எனது கடமை. அணையை உடைத்தபின் போராடுவதால் எவ்வித நன்மையும் கிடைக்காது. வருமுன் காக்க இந்த போராட்டங்களில் ஈடுபடுகிறோம். பிப்ரவரி 9 ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.
மாநில துணைபொதுச்செசயலாளர் நாரசேசத்துரை, விவசாய அணித்தலைவர் பொன்னுச்சாமி, மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன், தேனி மாவட்ட பொறுப்புகுழு தலைவர் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி தினமலர்

