பொங்கல் வாழ்த்து. இரா.கு.இராம் சுந்தர்.
Issues: National
Region: Tamil Nadu
Category: Feedback
Date:
Thu, 28/01/2010 இறந்தகாலத்தை
நிகழ்காலத் தொடராக்கி
நிகழ்காலத்தை
இறந்தகாலமாக்கி
மனிதநேயத்தை
மண்ணில்
புதைக்கும்
மூடத்தனத்தை
முற்றிலும்
ஒழிப்போம்!
நம்முள்
பிரிவினை ஏற்படுத்தும்
எற்றதாழ்வுகள் எதுவாயினும்
அவற்றை
போகியில்
பொசுக்குவோம்!!
நம்மைப்
பொறுத்தவரை
ராமனும் பாபரும்
கரையான் அரித்த
வரலாற்றுப் புத்தகத்தில்
வரை(ந்த) படங்களாகவே
இருக்கட்டும்!!
மசூதியின் கற்களில்
அடுப்பமைத்து
ராமன் பாதுகைகளை
விறகாக்கி
ஒற்றுமைப் பானையில்
அன்பெனும் அரிசியில்
பண்பெனும் பாலூற்றி
நேசமெனும் சர்க்கரை
கலப்போம்...
இனி
பொங்கட்டும்
சமதர்மச் சமுதாயம்..
தை
திருநாளில்
நல்ல விதைகளை
நம் மனதில்
விதைப்போம்..
ஏனெனில்
நம்
சந்ததிகளாவது
களைகளே
இல்லாத
விளை
நிலங்களாய்
உருவாகட்டும்!!
இதுவரை
இந்நாட்டு
மன்னர்களாய்
வாழ்ந்தது
போதும்
இனிமேலாவது
மனிதர்களாய்
வாழ முயற்சிப்போம்!!!
என்றென்றும் அன்புடன்,
இரா.கு.இராம் சுந்தர்.