மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. அஞ்சலி!
Issues: Environment, National
Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu
Category: Articles, Headlines
மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடத்தில்
மறுமலர்ச்சி தி.மு.க. அஞ்சலி!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை, மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப்போர்த் தியாகிகளான தாலமுத்து, நடராஜன் ஆகியோரின் நினைவிடத்தில் கழகப் பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி அவர்கள் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்டச் செயலாளர் சு. ஜீவன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ. நன்மாறன் மற்றும் டி.சி. இராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் ஏ.வி. இராஜன், பகுதிச் செயலாளர்கள் சு. நவநீதகிருஷ்ணன், எம்.கே. இஸ்மாயில், மாணவர் அணி தியாகராஜன், இளைஞர் அணி நாசர், தொண்டர் அணி விசு உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
தாயகம் தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
25.01.2012

