ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது! ஆவடி சீருடைகள் தயாரிப்பு நிறுவனத்தைப் பாதுகhக்க வேண்டும்! பிரதமருக்கு வைகோ கடிதம்

Issues: Human Rights, Law & Order, National, Politics, Science and Technology

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Tue, 23/01/2018

 

 

 

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத்
தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது!

ஆவடி சீருடைகள் தயாரிப்பு நிறுவனத்தைப் 
பாதுகhக்க வேண்டும்!
பிரதமருக்கு வைகோ கடிதம்

ந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று எழுதியுள்ள (23.1.2018) கடிதம். 

அன்புள்ள திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, 
 

வணக்கம். மிக முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 
 
சீனப் போரின்போது இந்திய இராணுவம் பின்வாங்கியதற்கு முதன்மையாகச் சொல்லப்பட்ட கhரணங்களுள் ஒன்று, நமது வீரர்களுக்கு, எல்லைப்பகுதிகளின் தட்பவெட்ப நிலைக்குத் தகுந்த போதுமான சீருடைகள் வழங்கப்படவில்லை என்பதாகும். அதனால், அன்றைய பாதுகhப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனன் அவர்கள், அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் கhமராசர் அவர்களை அணுகி, அதன் அடிப்படையில் தமிழக அரசு கொடுத்த நிலத்தில், ஆவடியில் சீருடைகள் தைத்துக் கொடுக்கும் (டீசனiயேnஉந ஊடடிவாiபே குயஉவடிசல-டீஊகு) நிறுவனம், 1961 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  தொடங்கப்பட்டது. கடந்த 56 ஆண்டுகளாக இராணுவ வீரர்களுக்குத் தேவையான உயர் தொழில்நுட்பத்தில், பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் அணியக்கூடிய, உலகத் தரம் வாய்ந்த சீருடைகளைத் தைத்துக் கொடுத்து வருகின்றது. 
 
ஆவடி நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதிலும், ஓசிஎ~ப் பெரும் பங்கு வகித்துள்ளது. தற்போது, இத்தொழிற்சாலையில் 811 பெண்கள் உட்பட 2,121 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். 
 
இராணுவம் மற்றும் பாதுகhப்புத் துறையின் உயர் அதிகhரிகள் பலர் இங்கே வருகை தந்து, இத்தொழிற்சாலையின் உற்பத்தித் திறனையும், புதிய தொழில்நுட்பங்களையும் கண்டு வியந்து, தொழிலாளர்களுக்குப் பாராட்டுகளும் தெரிவித்து உள்ளனர். 
 
ஆவடி தொழிற்சாலை போலவே, நமது இராணுவ வீரர்களுக்குச் சீருடைகள் தைத்துக்கொடுக்கின்ற மேலும் நான்கு தொழிற்சாலைகள், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளன. 
 
எவ்வித விளம்பரமும் இல்லாமல், நாட்டின் பாதுகhப்புப் பணிகளில் கடமை ஆற்றி வருகின்ற இந்தத் தொழிற்சாலைக்கு, பாதுகhப்புத் துறை மேற்கொண்டுள்ள முடிவால் பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது. 
 
படைத்துறைத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும்  சுமார் 650 பாதுகhப்புத் தளவாடங்களுள், சுமார் 250 பொருட்களைக் குறைந்த தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் (சூடிn ஊடிசந வைநஅள) என அறிவித்துள்ளனர். ஆவடி ஓசிஎ~ப் உள்ளிட்ட ஐந்து தொழிற்சாலையில் தைக்கப்படும் சீருடைகள், இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இனி இந்தச் சீருடைகளை, வெளிச்சந்தையில் தனியார் மூலமாகக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்கள். புதிதாக ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். பணி நியமனம் செய்யப்பட இருந்த 177 பதவிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
 
இதனால், ஆவடி தொழிற்சாலையின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டு, மூட வேண்டிய  சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. தற்போது பணியில் உள்ள 2121 தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இனிமேல் இராணுவ வீரர்களுக்கு இனிமேல் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக ஒவ்வொரு ஆண்டும் ரூ10000 சீருடைப்படியாகக் கொடுத்து விடுவது எனவும் மத்திய அரசு முடிவு எடுத்து, 16.11.2017 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இந்த முடிவுகள் அனைத்தும், தொழிற்சங்கங்களோடு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவை எதிர்த்து, அனைத்து இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் பல்வேறு  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை; மாறாக, தான் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றது. 
 
கடந்த கhலங்களிலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டபோது, தொழிலாளர்களின் போராட்டங்களால் பாதுகhப்பு அமைச்சர்களாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டÞ, ஜÞவந்த் சிங், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி ஆகியோர், 
 
“படைத்துறைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது. எதிர்கhலத்தில் இராணுவத்திற்குத் தேவையான புதிய  தளவாடங்களையும் உற்பத்தி செய்வதற்கு, படைத்துறைத் தொழிற்சாலைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டின் சுயசார்பைக் கவனத்தில் கொண்டு, படைத்துறைத் தொழிற்சாலைகளைப் பலப்படுத்துவதற்கhன அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்”
 
என  வாக்குறுதி அளித்துள்ளனர். 
 
தற்போது, மேற்கண்ட வாக்குறுதி மீறப்பட்டு, படைத்துறைக்குத் தேவையான பொருட்கள் உற்பத்தியைத்  தனியாருக்குத் தாரை வார்க்க முயன்று வருகின்றனர். மாற்றுப்பணி என்ற பெயரில், தொழிலாளர்களை இடமாற்றம் செய்ய முனைந்து வருகின்றார்கள். தற்போது பயிற்சி பெற்று வருகின்ற இளைஞர்களின் எதிர்கhலமும் கேள்விக்குறி ஆகி இருக்கின்றது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைத்து வருகின்ற வேலை வாய்ப்புகளை அறவே இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. 
 
சீருடையை இராணுவ வீரர்களே வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டால், நாடு முழுமையும் சீருடைகள் ஒரே நிறத்தில், ஒரே தரத்தில் அமையாது. அதனால், இராணுவத்தின் மதிப்பு குறையும் சூழ்நிலை ஏற்படும்; ஊழல் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.
 
தற்போது வட இந்தியாவில் எல்லைப்புற நகரங்கள் கிராமங்களில் இராணுவச் சீருடைகள் போலவே விற்பனையாகின் தரம் குறைந்த சீருடைகளை அணிந்துகொண்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இது நாட்டின் பாதுகhப்பைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கின்றது.
 
ஆவடி தொழிற்சாலை உருவாக்கி வருகின்ற இராணுவச் சீருடைகளுக்குக் கhப்புரிமை பெற்றுள்ளது. 14 விதமான தரச் சோதனைகளுக்குப் பிறகே, சீருடைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. 
 
எனவே, எந்தக் கhரணத்தைக் கொண்டும், ஆவடி தொழிற்சாலையை மூடக்கூடாது;  
 
இராணுவத் தளவாடங்களைப் படைத்துறைத் தொழிற்சாலைகளே தயாரிக்க வேண்டும்; 
 
அவற்றை மேலும் பலப்படுத்துவதற்கhன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகிறேன்.
 
 
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்,
23.01.2018 மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)