டாக்டர் கலைஞருடன் வைகோ சந்திப்பு

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Photo Gallery

Date: 
Mon, 08/01/2018

 

 

 

 


டாக்டர் கலைஞருடன் வைகோ சந்திப்பு

 

ட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.கழகத்தின் செயல் தலைவருமான தளபதி ஸ்டாலின் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்  இன்று இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில்  சந்தித்தார். அவரோடு உரையாடிவிட்டு, அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.

இரவு 8 மணி அளவில் டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ பார்த்தபோது, யார் என்று தெரிகிறதா? என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் கலைஞரிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என உணர்த்தினார்.

சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்கபலமாக, உறுதுணையாக செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவு செய்தது என்று நான் கூறினேன்.

அண்ணன் கலைஞர் அவர்கள் கரத்தைப் பற்றிக்கொண்டேன். மனதை நெகிழச் செய்கின்ற உணர்ச்சிமயமான சந்திப்பாக எனக்கு அமைந்ததுஎன்று வைகோ கூறினார்.

தாயகம்                                                  தலைமைக் கழகம்
சென்னை - 8                                          மறுமலர்ச்சி தி.மு.க.,
08.01.2018

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)