ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்த சீனிவாசன் உடல் நலம் விசாரித்தார் வைகோ!
Issues: Human Rights, Srilanka
Region: Tamil Nadu
Category: Press Releases, Announcements
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்த சீனிவாசன் உடல் நலம் விசாரித்தார் வைகோ!
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக்கோரி வேலூர், வாணியம்பாடியில் உள்ள வள்ளிப்பட்டு கிராமத்தைச் சார்ந்த தோழர் சீனிவாசன் வயது 36, பிப்ரவரி 26 அன்று இரவு மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இத்தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 27.02.2009 அன்று காலை சென்னை ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு உடன் வாணியம்பாடிக்குச் சென்றார்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு சீனிவாசன் அவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவரது துணைவியாருக்கு ஆறுதல் கூறினார். நள்ளிரவு சென்னை வந்து 28.02.2009 காலை தூத்துக்குடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றார்.
‘தாயகம்’
சென்னை - 8
01.03.2009
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்