ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு அளிக்காமல் ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை இந்தியா கோர வேண்டும் பிரதமருக்கு வைகோ கடிதம்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Letters

Date: 
Mon, 06/03/2017

 

 

 

 


ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்
இலங்கைக்கு ஆதரவு அளிக்காமல்
ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை இந்தியா கோர வேண்டும்

பிரதமருக்கு வைகோ கடிதம்

ன்று 2017 மார்ச் 6 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வைகோ மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் ஜெனீவாவில் நடைபெற்று வருகிற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைத் தீவில் உள்ள தற்போதைய சூழ்நிலையையும், இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்தும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

1955 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை சிங்கள அரசு தொடுத்ததோடு, ஈழத் தமிழ் இனத்தை அழிக்க இனப் படுகொலை செய்து வந்தது. 1999 ஆம் ஆண்டில் அப்பொழுது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இலங்கைக்கு இந்திய அரசு எந்தவிதமான இராணுவ உதவியும் செய்வது இல்லை என்றும், ஆயுதங்களை விற்பனைகூட செய்வது இல்லை என்றும் அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவை பிரகடனம் செய்தார்.

ஆனால் அந்த முடிவுக்கு நேர் எதிராக பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து விதமான இராணுவ உதவியையும் இலங்கை அரசுக்குச் செய்ததோடு, ஆயுதங்களும் வழங்கியது. இலங்கை அரசுடன் இருநாட்டு கடல்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தமும் செய்தது.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா.வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்கள், மார்சுகி தாரீஸ்மன் தலைமையில் அமைத்த மூவர் குழு 190 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் 2009 ஆம் ஆண்டில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை ஆதாரத்தோடு வெளியிட்டது.

ஆனால், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே மாதத்தில் மிகவும் வஞ்சமாக இலங்கை அரசைப் பாராட்டி மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் போட உதவியது.

2015 ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சில், 2009 இல் சிங்கள இராணுவம் நடத்திய போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சுதந்திரமான பாரபட்சமற்ற விசாரணையை பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அத்தகைய விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்காமல் மறுத்துவிட்டது. மேலும் இலங்கை அதிபர் மைதிரி பால சிறிசேனாவும், இலங்கையின் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கேயும் 2009 இல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து விசாரணை செய்ய இலங்கைக்குள் எந்த வெளிநாட்டு நீதிபதியையும் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போய்விட்டனர். 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாகிவிட்டனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் பூமியை சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டு, சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்திவிட்டனர். கண்துடைப்புக்காக வெறும் 3ஆயிரம் ஏக்கர் நிலம்தான் ஈழத்தமிழர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு 2017 மார்ச் 3 ஆம் தேதி ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன், ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில் நடைபெற்ற கொலைகள் குறித்து விசாரிக்க முன்வராமல் சிங்கள அரசு தயக்கம் காட்டி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையை இந்திய அரசு பின்பற்றக் கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவக் கூடாது. அப்படி உதவினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் தாங்க முடியாத ரணத்தையும், வேதனையையும் ஏற்படுத்தும். எனவே, இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று வைகோ மின்னஞ்சல் கடிதம் பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.

தாயகம்                                                           தலைமைக் கழகம்
சென்னை - 8                                                   மறுமலர்ச்சி தி.மு.க.,
06.03.2017

 

 

 

 

 

 

Shri Narendra Modi ji

Vanakkam,

I would like to bring to your kind attention the latest developments in Sri Lanka and India's stance ongoing United Nations Human Rights Council (HRC) meeting in Geneva.

Since 1955, Sri Lanka has unleashed unprecedented attack on ethnic Tamils in north and east of the island nation leading to ethnic cleansing and genocide.

In 1999, the then-Honorable Prime Minister Shri Atal Bihari Vajpayee convened an all-party meet on the Sri Lankan issue and declared that the Indian Government will not support the Sri Lankan government with military assistance or sell weapons to them.  This unanimous all-party decision was shelved by the UPA government, headed by the Congress Party, and they began supplying all kinds of military assistance, including supply of weapons and all logistical support to the Sri Lankan government. The then-UPA government entered into a naval communication agreement with the Sri Lankan government for sharing of all vital information.

On 22 June 2010, the 3-member UN committee, headed by Mr Marzuki Darusman, set up by the UN Secretary-General Ban Ki-moon submitted a 190 page Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka, which mentions the terrible massacre of 137000 Tamils including aged people, women and children and unarmed Tamil civilians by the Sri Lankan Armed Forces in 2009. But treacherously the then-UPA Government of India supported Sri Lanka in the Human Rights Council (HRC), in May 2009 which adopted a resolution commending the role of the Sri Lankan government in the ethnic conflict. 

In the year 2015, the UN Human Rights Council (HRC) adopted a resolution paving the way for an independent impartial investigation by international jurists into the war crimes committed by the Sri Lankan army in 2009.  But the Sri Lankan government refused to cooperate with the investigation. On the other hand the Sri Lankan President Maithripala Sirisena and the Prime Minister Ranil Wickremesinghe declared that Sri Lanka will not permit any jurist from any country into Sri Lanka for the investigation into the happenings of 2009.  More than 100,00,00 Tamils have disappeared and 90,000 Tamil women were widowed because of the attacks.  More than 60000 acres in the Northern Province alone have been occupied by the Sri Lankan armed forces and only 3000 acres of land has been returned to the Tamils. Thousands of Tamils are still suffering in the prisons.

In this background, on 3rd March 2017, the United Nations High Commissioner for Human Rights (UNHCHR) Mr Zeid Ra'ad Al Hussein made a statement that at least 1,00,000 Tamils people where killed in the conflict between Tamil separatists and Sri Lankan armed forces and criticized the government's slow progress in addressing wartime crimes.

In the ongoing session of the Human Rights Council (HRC) in Geniva the Indian Government should not continue the wrong stance taken by the previous UPA government.  I request you that the Indian Government should not support Sri Lanka in the Human Rights Council on any account, which could cause unbearable agony in the minds of the Tamils all over the world. Therefore, I request you to take necessary steps to change the Indian Government's position in the HRC in favor of an independent international investigation into the genocide of Tamils committed in 2009 by the Sri Lankan armed forces.

 

With warm regards,

 

Yours Sincerely,

(Vaiko)

Hon’ble Shri Narendra Modi,

Prime Minister,

Government of India,

South Block,

New Delhi - 110 011

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)