மறுமலர்ச்சி தி.மு.க. விவசாய அணி நடத்தும் கொங்கு மண்டல விவசாயிகள் கோரிக்கைப் பேரணி - மாநாடு 07.12.2009 திங்கட்கிழமை, மாலை 3 மணி - பொள்ளாச்சி
Issues: Farmers
Region: Coimbatore - Urban, Coimbatore - Rural, Tamil Nadu
Category: Announcements
மறுமலர்ச்சி தி.மு.க. விவசாய அணி நடத்தும் கொங்கு மண்டல விவசாயிகள் கோரிக்கைப் பேரணி - மாநாடு
07.12.2009 திங்கட்கிழமை, மாலை 3 மணி - பொள்ளாச்சி
கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் பேரணி மற்றும் மாநாடு பொள்ளாச்சி நகரில் நடைபெற உள்ளது.
* தென்னை மற்றும் கரும்பு விவசாயிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண.
* கள் இறக்க அனுமதி.
* பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுபடியான விலை.
* ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.
* பாண்டியாறு, புன்னம்புழா, அவிநாசி - அத்திக்கடவு திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.
* மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது.
* மின்சார தட்டுப்பாடும் விவசாயிகள் வேதனையும்.
* மின் இணைப்புக் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனே இலவசமாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
* தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்.
* விவசாயிகளுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி கொடுக்க வேண்டும்.
* இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்.
* விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் இரத்து செய்ய வேண்டும்.
மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி - மாநாடு நடைபெற உள்ளது.
அணி திரள்வீர்! ஆதரவு தாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு : மறுமலர்ச்சி தி.மு.க. விவசாய அணி, கோவை மாவட்டம்