Wed, 15/04/2009

“அகில இந்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிற தேர்வுகளில் 1999-ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப் படுகின்ற தேர்வு முறை காரணமாக இந்தி பேசாத மாநில மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் கொழுந்து விட்டு எரிகிற பிரச்சினையாகும். இதில் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பு இல்லாமல் போவதால் பெரும் அநீதி தமிழக மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ளது,”

ராஜபக்சே அரசோடு சேர்ந்துகொண்டு இந்திய அரசு செய்துவரும் துரோகத்தை மறைக்க தமிழக முதல்வர் மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கை

22,300 க்கு மேற்பட்ட வீரர்களைக் களத்திலே இழந்தோம். சிங்கள இனவாதத் தாக்குதலில் இலட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறிகொடுத்து இருக்கின்றோம். இப்படி ஒரு இனத்தையே அழிப்பதற்கு அரசப் படைகளை ஏவி இருக்கின்ற நிலையில்தான் தமிழ் ஈழ இளம் தலைமுறை ஆயதப் போராட்டத்தை ஏந்தியது.

மாநில சுயாட்சி குறித்து மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கொள்கை தெளிவானது. எந்தவிதக் குழப்பத்திற்கும் இடம் இல்லாதது. இந்தியா ஒரு உண்மையான கூட்டு ஆட்சியாக இருக்க வேண்டும். மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தால்தான் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க முடியும். அனைத்து இன மக்களின் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசு அமைப்புச் சட்டத்தின் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

மண்டபம் முகாம் ஈழத் தமிழ் அகதிகளுடன் வைகோ

Tue, 17/03/2009

நம்நாட்டில் ஏராளமான நதிகள் பல மாநிலங்களிடையே ஓடுகின்றன .அதிக அளவிலான நீர் பயன்படுத்தப்படாமலேயே ,கடலில் கலந்து வீணாகின்றது .இந்த ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் ஒரு முன்னோக்குத் திட்டத்தை வகுத்தோமானால் ,நம்நாட்டின் வளமான வேளாண்மைச் செல்வத்துடன் உலகிலேயே நாம் தலையாய பொருளாதார வல்லரசாகத் திகழ முடியும் . வைகோ .

‘காங்கிரஸ் கட்சியை ஒருகாலத்தில் நான் கட்டிக்காத்து வளர்த்தவன். அது சுயநலக் கூடாரம் ஆகிவிட்டது. நாட்டைக் கேடு செய்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்க வேண்டும் இந்தப் பகுதியில். அதற்காகவே உங்களைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகலாம் - என் கருத்தை - என்று கூற வந்தேன்’ என்று என் தந்தையாரிடம் தேவர் ஐயா தெரிவித்தார்கள்.

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)