" சங்கரன் கோவிலில் சரித்திரம் படைப்போம் ”

 உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் திரு. வைகோ அவர்களின் கரத்தை வலுபடுத்தவும், மதிமுக வை பலப்படுத்தவும் அயராது உழைப்போம். ” சங்கரன் கோவிலில் சரித்திரம் படைப்போம் ”.

நேற்று வரை ஊழல் பெருச்சாளிகளின் செய்கைகளினால் உறங்கிக் கொண்டிருந்த தமிழகம்,   இன்று  மெல்ல விழித்துக் கொண்டிருக்கின்றது உழைக்கும் போராளிகளின், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் திரு. வைகோ அவர்களின் செயற்கரிய செயல்களினால்...

முழுமையான மாற்றத்தை - மறுமலர்ச்சியை திரு. வைகோ அவர்களால் மட்டுமே உருவாக்க இயலும் என்பதை தமிழகம் உணர்ந்திருக்கின்றது. 

இத் தருணத்தில் உணர்வான உள்ளங்கள் அனைத்தும் ஒன்று கூடி உழைப்போம். ” சங்கரன் கோவிலில் சரித்திரம் படைப்போம் ”.

விழிப்புடன் வீறு நடைபோடும்  எழுச்சி மிக்க இளைஞர் சமுதாயமே வீதி வீதியாக செல்வோம், கயவரகளையும் - கள்வர்களையும் நாடறியும். அவர்தம் செயல்கள் அனைத்தும் ஊரறியும். இவர்களைப் பற்றிப் பேசி நம் நேரத்தை  வீணாக்காமல் மறுமலர்ச்சி திராவிட கழகம் தமிழக மக்களுக்காக  ஆற்றிய அளப்பரிய செயல்களை சொல்வோம். ” சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் வெல்வோம் ”.
 
நாம் வரலாறு படிக்க மட்டுமல்ல படைக்கவும் தெரிந்தவர்கள் என்பதை ஊழலில் ஊறியவர்களுக்கு உணர்த்துவோம்.

அரசியலில் நேர்மை - பொது வாழ்வில் துர்ய்மை - இலட்சியத்தில் உறுதியோடு யுத்தகளத்தில் ரத்தம் சிந்திய வீரத் தமிழர்களுக்கு நமது ” சங்கரன் கோவில் ” வெற்றியை காணிக்கையாக்குவோம்.

வாழ்வது ஒரு முறை - வாழ்த்தட்டும் நம் தலைமுறை - வாருங்கள் களம் காண....

” நாளை நமதே ”....

என்றும் மறுமலர்ச்சி பாதையில் - மதனந்தபுரம் ஆ. வரதன்.
 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)