வைகோ ஒரு பீனிக்ஸ் பறவை........

வைகோ ஒரு பீனிக்ஸ் பறவை........

இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகளில் மிக நேர்மையானவரும் , நன்கு படித்தவரும் (Gold Medalist-UG) வை கோ ஒருவர் தான். யாரையும் ஏமாற்றியோ அல்லது அடுத்தவர்கள் கட்சியை அபகறித்தோ அவர் வரவில்லை . நேர்மையாக இருப்பதால் அவர் கொடுத்த விலைகள் ஏராளம். தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் தலைவரர்கள் மத்தியில் தன் தொண்டர்களை பற்றி சிந்திக்கும் தலைவர் அவர் ஒருவர் தான். வைகோ 96 ல் போட்டியிட்ட பொது அவரை தோற்கடித்த ரவிசங்கர் இன்றைக்கு சிறையில் உள்ளார் .வைகோ வின் வேட்பாளரை  (பொள்ளாச்சி டாக்டர் கிருஷ்ணன் ) தோற்கடித்த ஆண்டிமுத்து  ராஜா திகார் சிறையில் உள்ளார்.தோல்வி வைகோ வையும் ,அவரை தேர்ந்து எடுக்காத மக்களுக்கே தவிர வைகோ விற்கு இல்லை .

வைகோ வை பற்றி உணர்ச்சி அதிகம் மிக்கவர்,ஈழ தமிழர்களுக்கு மட்டும் குரல் எழுப்புவார் என்கிறார்கள்.

முல்லை பெரியாறு என்ன மும்பையில் இருகிறதா ?
பாலாறு என்ன பாலஸ்தீனத்தில் இருகிறதா ?
என் ல் சி என்ன அமெரிக்காவில் இருகிறதா ?
தூத்துக்குடி என்ன துபாய்லயா இருக்கு?
சேது சமுத்திர திட்டம் ,பொள்ளாச்சி - கிணத்துகடவு அகல ரயில் பாதை போன்ற திட்டத்திற்காக போராடியது யார் ? இன்னும் பல உண்டு.......

ஈழத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்க பட்ட போது,முலைகள் அறுக்கப்பட்ட போது ,சிறுவர்கள் கொல்லப்பட்ட போது ,எந்த ஒரு மனிதனும் உணர்ச்சி வயப் படுவான்.வைகோ ஒன்றும் மற்றவர்களை போல இரங்கல்  பா மட்டும் பாடவில்லை.தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தார்.சென்ற சட்ட மன்ற தேர்தலில்(2006) ம தி மு க போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் தனி கவனம் (பணம் தான் ) செலுத்தி வைகோ வின் வேட்பாளர்களை தோற்கடித்தனர் .

உழைக்கும் கரங்களுக்கு இந்தியாவில் மே 1 ம் தேதி விடுமுறை விடுமுறை பெற்று கொடுத்தார்.

வைகோ விட்டு கண்ணபனும்,செஞ்சி ,    எல் ஜி, தாணு  பிரிந்த போது அவர்கள் ஊரின் கிளை செயலாளர்கள் கூட அவர்களுடன் செல்லவில்லை.அரசியல் களத்தில் நாங்கள் தோல்விகளை மட்டுமே சுவைத்தவர்கள் .அந்த தோல்விகளை வெற்றி படிகளாக்கி வைகோ கண்டிப்பாக அரசியலில் சாதிப்பார். அன்று இந்திய விடுதலை போராட்டத்தில் 60 கோடி மக்களும் கலந்து கொள்ள வில்லை உணர்வு மிக்க ஒரு கூட்டம் மட்டும் தான் கலந்து கொண்டனர் .கௌரவர்கள் நூறு பேரை பஞ்ச பாண்டவர்கள் 5 மட்டும் தான் எதிர்த்து போராடினர் ,300 ஸ்பார்டா வீரர்கள் மிக பெரிய படையை எதிர்த்து வெற்றி பெற்றனர் ,ராவணனை அழிக்க சென்ற ராமன் சில நூறு பேரை மட்டும் வைத்து தான் ராவணனை அழித்தான். வைகோ வின் தொண்டர்களும் சில லட்சம் பேர்தான் . அவர் ஒருவராலேயே தமிழர்களுக்கு விடிவு கிட்டும் என்பதில் ஐயமில்லை . ஆனால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வைகோ விற்கு உண்டு.


குறைந்த பட்சம் செயல் திட்டம் இல்லாமல் வெறும் முதல்வர் ஆவது ஒன்றே குறிக்கோளாக உள்ளவர்கள் மத்தியல் வைகோ ஒரு குறிஞ்சி மலர். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு உயிர் கொடுத்து அவற்றை செயல்படுத்தும் அண்ணாவின் தம்பி. இன்றும் நமதே!  நிச்சயம் நாளையும்  நமதே!

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் மங்காத சங்கத்தமிழ் என்று சங்கே முழங்கு"

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)