அண்ணாவின் புகழை நிலைநிறுத்துவோம்!
திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்போம்!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மதுரை மண்டல மாநாட்டில் வைகோ 15.09.2008

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையாக இன்றைக்கு மதத்தீவிரவாதம் இருக்கிறது. அது, குறிப்பிட்ட இந்த மதம்தான் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பல எல்லைகளைத் தாண்டி வளருவதும், அதன் விளைவாக வெறுப்பு வளர்வதும், ஆங்காங்கு கலவரங்கள், மோதல்கள் நிகழ்வதும் தொடர்கின்றன. அந்தக் கலவரத் தீ, நமது அன்னைத் தமிழகத்துக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்ற கவலையால், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து உருவாக்கி, கட்டிக்காத்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு பொது நல ஊழியன் என்ற முறையில் எனக்கு இருக்கிறது என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை நான் முன்னின்று நடத்துகிறேன்.

‘எந்த உணர்ச்சியோடு பகத்சிங் அந்த மண்ணை எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் வைத்துப் பூஜித்தானோ, நான் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் மண்ணை பூஜிக்கத்தக்க மண்ணாகக் கருதி, என் கையில் எடுத்துகொண்டு வந்து இருந்தேன். அந்த மண்ணைக் காட்டி, அதற்கு முத்தமிட்டுவிட்டுத்தான் நான் பேசினேன். அந்த மண்ணையும் வைத்து இருக்கிறேன். வல்வெட்டித் துறை மண்ணையும் வன்னிக்காட்டு மண்ணையும் நான் வைத்து இருக்கிறேன்.

வைகோ உரை
வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்”
உரை நூல் வெளியீட்டு விழா
திருநெல்வேலி - 22.08.2008

இனிமேல் தில்லி ஆட்சி பீடத்திற்கு வரக்கூடிய எவருக்கும், தமிழர்களுக்குத் துரோகம் செய்கின்ற எண்ணம் துளிகூட வரக்கூடாத வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும். துரோகத்தை இயேசு மன்னிக்கலாம், மகாத்மாக்கள் மன்னிக்கலாம். மன்னிப்பதாகச் சொல்லலாம். ஆனால், துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது. ஜூடாஸ்சை இன்றுவரை உலகம் மன்னிக்கவில்லை. எட்டப்பனை இன்று வரை தமிழகம் மன்னிக்கவில்லை. மீர்ஜாபரை இன்றுவரை வங்கம் மன்னிக்கவில்லை. காக்கை வன்னியனை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான். கருணாக்களையும் என்றைக்கும் எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)