‘ஆர்.வி.’ என்று இரண்டு எழுத்துகளால் அனைவராலும் மதிப்போடு அழைக்கப்பட்ட  ஆர். வெங்கட்ராமன் அவர்கள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்றவர்.  தியாக வாழ்வை ஏற்றவர்.

முல்லைத்தீவில் அப்பாவித் தமிழர்கள் 500 பேர் படுகொலை;
3000 பேர் படுகாயம்!

இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்னைத் தமிழ்மொழியின் உரிமை காக்கத் தமிழர்களைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அறப்போர்க்களம் காண அறைகூவி அழைத்ததால், 1963 ஆம் ஆண்டில்  இருந்தே தீவிரம் அடைந்த மொழிப்போராட்டம், 1964 ஜனவரி 24 இல் சிங்கத் தமிழன் சின்னச்சாமி நெருப்புக்குத் தன் உயிரைத் தாரை வார்க்க, கிளர்ச்சித் தீ தமிழர்களின் மனங்களில் பரவ, 1965 ஜனவரி 25 இல் தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் குதித்து, இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகள், பள்ளிகள், வகுப்புகளைப் புறக்கணித்துப் பிரளயம்போல் பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவின் முன்னாள் உதவி அட்டார்னி ஜெனரலும், தற்போது அமெரிக்காவில் வாழும் ஈழத் தமிழர்களுக்காக வழக்கறிஞராக செயல்பட்டு வருபவருமான புரூஸ் வெயின் (Bruce Fein) கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை 22.1.2009 அன்று தாயகத்தில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் உரையாடினார்.

இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் சிங்கள இராணுவத்தின் மரண வளையத்துக்குள் ஐந்தரை இலட்சம் தமிழ் மக்கள் பீரங்கித் தாக்குதலாலும், விமானக் குண்டு வீச்சாலும் பேரபாயத்துக்கு ஆளாகி உள்ளனர். மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசப்பட்டதில் கடந்த ஒரு வாரத்தில் 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வைகோ  கண்டனம்
நேற்று (05.02.2009) இரவு சென்னை, திருமங்கலத்தில் உள்ள இந்திய கம்யூனிÞடு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்களது இல்லத்தில் இருந்த அவரது காரையும், மோட்டார் சைக்கிளையும் ஒரு கொடிய நோக்கத்தோடு சில கயவர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளார்கள்.

ஈழத்தமிழர் படுகொலையால், இந்திய அரசின் துரோகத்தால்,நெஞ்சைப் பிளக்கும் வேதனை தாக்கும் இந்த நேரத்தில், தமிழர்கள் மனக்காயத்துக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும், மிக நல்ல செய்தி வந்து உள்ளது.

இலங்கைத் தீவில் துன்பத்தில் மடியும் ஈழத்தமிழர்களைக் காக்கவும், சிங்கள அரசு நடத்தும் தமிழ் இனக்கொலைப் போருக்கு அனைத்துவிதமான இராணுவ உதவிகளும் செய்து, தமிழர் இன அழிப்புப் போரை இயக்கிவரும் இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், இன்று தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியைப் பெற்று உள்ளது.

இலங்கையில் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இராணுவத் தாக்குதல் குறித்து, அரசுக்கு எதிராகச் செய்திகள் தரும், பன்னாட்டுச் செய்தியாளர்களும், வெளிநாட்டுத் துhதரக அதிகாரிகளும், இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்று சிங்கள அதிபர் ராஜபக்சே கொக்கரித்து உள்ளான்.

மனிதநேயம் அரசுக்கும், காவல்துறைக்கும் செத்துப்போய்விட்டதா?

வைகோ குற்றச்சாட்டு

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)