நீலகிரி தொகுதி நாடாளுமன்ற மக்களவை வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணன்
மாவட்டம்: நீலகிரி
விவகாரங்கள்: அரசியல்
டாக்டர் சி .கிருஷ்ணன் .இவரது தகப்பனார் சின்னசாமி ,தாயார் பழனியம்மாள்,இவர் பிறந்த தேதி 07.06.1936.மனைவி தேன்மொழி இவருக்கு 2
மகன்கள் .
1964 முதல் 1994 வரை உடுமலைபேட்டை தாலுகாவில் மடத்துக்குளம் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றினார் .
டாக்டர் கிருஷ்ணன், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், அதே தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களில், பல்வேறு அமைச்சரகங்களின் ஆலோசனைக்குழுவிலும் இடம் பெற்று இருந்தார்.
டாக்டர் கிருஷ்ணன் பழகுதற்கு இனிய பண்பாளர். நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாள்களில், ஒருநாள்கூடத் தவறாமல் நாடாளுமன்றத்துக்குச் சென்று, விவாதங்களில் பங்கு ஏற்று, கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார். இவர், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை, கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொகுத்து வெளியிட்டு இருக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, பயிற்சி மருத்துவராக இருந்த டாக்டர் கிருஷ்ணன் அவர்கள், முழுநேரமும் அண்ணா அவர்களின் அருகிலேயே இருந்து மருத்துவ உதவிகள் அளித்தார். கிருஷ்ணனது பழகும் தன்மை, பணிவிடைகளால் மகிழ்ந்த அண்ணா அவர்கள், தம் கைப்பட டாக்டர் கிருஷ்ணன் அவர்களைப் பாராட்டி ஐந்து பக்கம் நீண்ட மடல் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தின் நகலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொள்ளாச்சி தொகுதி முழுவதும் வழங்கினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற கட்சியின் 18 ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த பொதுச்செயலாளர் வைகோ, ‘டாக்டர் கிருஷ்ணன் அவர்களின் நேர்மை, எளிமை, தன்னலமற்ற தொண்டு மற்றும், கட்சிக்குச் சோதனை ஏற்பட்ட காலங்களில் 15 கோடி கொடுக்கிறோம், கட்சியை விட்டு வெளியே வாருங்கள் என்று கட்சியை விட்டு சென்ற துரோகிகள் மூலம் ஆசை காட்டியபோதும், கட்சிக்கு உண்மையான தொண்டனாக அவர் காட்டிய விசுவாசத்துக்காக, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் கிரூஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்’ என்று அறிவித்தார்.

