ஈஸ்டர் திருநாள் - வைகோ வாழ்த்து
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
மாவட்டம்: தமிழ்நாடு
ஈஸ்டர் திருநாள் - வைகோ வாழ்த்து.
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் துக்கமும் துயரமும் விளைந்த நிகழ்ச்சிதான் கொல்கதாவில் இயேசுபெருமான் சிலுவையில் அறையப்பட்ட துன்பச் சம்பவமாகும். சகிக்க முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாகி, சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு இரத்தம் கொட்டிய போதும் ‘பிதாவே, இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் இருக்கிறார்களே’, என்று ஆவியைத் துறந்த மனித குல இரட்சகரான இயேசு பெருமான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகைத் திருநாளாக உலகம் கொண்டாடுகிறது.
துயரப்படுகிறவர்களுக்கும், அல்லலுக்கு ஆட்படுகின்றவர்களுக்கும் ஒரு வெளிச்ச விடியல் ஏற்பட்டுத் தீரும் என்ற நம்பிக்கையை ஈஸ்டர் பண்டிகை மனிதகுலத்துக்கு வழங்குகிறது. கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் நிறைந்த ஈஸ்டர் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

