அன்புள்ள தலைவா ! உன்னை எண்ணும் போது தமிழனாய் பிறந்ததன் அர்த்தம் புரிகிறேன்.

செய்தித்துறை: அபிப்ராயம்

மாவட்டம்: தமிழ்நாடு

Date: 
Tue, 06/04/2010

அன்புள்ள தலைவா !

                                            உன்னை எண்ணும் போது தமிழனாய் பிறந்ததன்  அர்த்தம் புரிகிறேன். ஏமாற்று அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்த தமிழகத்தில், சூட்சி தெரியாத சொக்கதங்கமே  ! தனி மனித ஒழுக்கத்தையும், அரசியல் நாகரிகத்தையும் உலகுக்கே கற்றுத்தரும் தமிழ் புதல்வா ! தகுதி இல்லாதோர் அமர்கின்ற பதவிகளால் , தகுதியான உனக்கு தமிழன்னை ஒரு பதவியை தேடிக்கொண்டிருக்கிறாள் . நான் சேலத்தில் பொறியியல் படிக்கும் போதே உங்களின் பேச்சில் பட்ட பொறியால் ஈர்க்கப்பட்டேன் பின் சென்னையில் பணியாற்றியபோதும் பொதுக்கூட்டங்கள் பலவற்றில் கடைசிவரிசையில் நின்று உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன் . உங்களை பார்ப்பதே பெரும் கனவாக இருந்த எனக்கு சென்ற வாரம் நான் சிங்கபூரிலிருந்து இந்தியா வந்தபோது நீங்கள் உங்கள் வீட்டிற்கு வருவதாக கேள்விப்பட்டு என் குறுகிய விடுமுறையையும் பொருட்படுத்தாது உங்களை சந்தித்து பேசிய கனங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை . உங்களின் எளிமை , சிறுவரையும் மதிக்கும் குணம் மெய்சிலிர்த்தேன் ! நீங்கள் ஆளப்பிறந்தவர் ! உங்களுக்கு தமிழகம் மட்டும் போதாது ! பாராளுமன்ற புலி என்று பேரெடுத்த நீங்கள் இந்த பாரை ஆள தகுதி படைத்தவர் .

உண்மையுடன் வைகோவின் பக்தன்
A.R Vivek
Singapore.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)