சித்திரைத் திருநாள் வாழ்த்து வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Thu, 13/04/2017

 

 

 

 

 
 
 
சித்திரைத் திருநாள் வாழ்த்து

வைகோ

 
ன்று கhலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரன் அவர்களிடம், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து.
 
இளவேனில் கhலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்தான் சித்திரை முதல் நாள் ஆகும். முத்திரை பதிக்கும் முழுமதியோடும், புதுப் பொலிவோடும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது.  இவ்வாண்டு சித்திரை நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 126 ஆவது பிறந்த நாளாக மட்டும் அல்ல; இயேசுநாதரின் சிலுவைப்பாடு முடிந்த புனித வெள்ளியாகவும் மலர்ந்துள்ளது.  மீண்டும் உயிர்த்தெழும் ஈஸ்டர் நம்பிக்கையைச் சுமந்தபடி மலர்ந்து இருக்கும் இந்தச் சித்திரைத் திருநாள், விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும்; வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை  விதைக்கட்டும். 
 
தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றித் தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவூட்டிடவும் களத்தில் இறங்கிக் கடமை ஆற்றுவோம். 
 
தரணி எங்கனும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

                                         வைகோ
சென்னை  பொதுச்செயலாளர்
13.04.2017 மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)