புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வைகோ, அ.இ.அ.தி.மு.க. முன்னணியினர் மற்றும் கூட்டணியினர் சிறப்புரை
விவகாரங்கள்: தேசிய
மாவட்டம்: சென்னை - வடக்கு, தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
புனித ரமலான் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
வைகோ, அ.இ.அ.தி.மு.க. முன்னணியினர் மற்றும் கூட்டணியினர் சிறப்புரை
இஸ்லாமியப் பெருமக்களின் கடமைகளுள் ஒன்றான புனித ரமலான் நோன்பின்போது நோன்பு திறக்கின்ற நிகழ்ச்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (27.08.2010 வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி அளவில் சென்னை - 600 001, மரைக்காயர் லெப்பை தெரு, அன்னை ஆயிஷா மஹாலில் (S.M.H.Palace) (துறைமுகம் தொலைபேசி இணைப்பகம் அருகில்) நடைபெறுகிறது.
கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஹாஜி சீமா பஷீர் அவர்கள் தலைமையேற்க, அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளர் திரு. அ.அன்வர்ராஜா, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சி.இ. சத்யா, திரு. இமயம் ஜெபராஜ், தமிழ்மாநில முஸ்லிம் லீக் அமீருள் மில்லத் எஸ்.ஷேக் தாவுட், அல்ஹாஜ் ஏ.எம்.பாரூக், ஹாஜி ஐ.நூர்தீன், தமிழ்முழக்கம் ஜெ.சாகுல் ஹமீது, ஹாஜி பி.நஸ்ருல்லா, ஜனாப் ஏ.கே.தாஜூதீன், ஹாஜி எஸ்.அமீர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகின்றனர்.

