கேரளா புதிய அணை கட்டினால் தெலுங்கானாக்கள் உருவாகும்: தேனியில் வைகோ எச்சரிக்கை- தினமலர் கட்டுரை மற்றும் வாசகர் கருத்துக்கள்
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், புறநகர்
மாவட்டம்: தேனி, தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள்
கேரளா புதிய அணை கட்டினால் தெலுங்கானாக்கள் உருவாகும்: தேனியில் வைகோ எச்சரிக்கை
டிசம்பர் 18,2009
தேனி:முல்லை பெரியாற்றில் கேரளா புதிய அணை கட்டினால் ஆயிரம் தெலுங்கானாக்கள் உருவாகும் என வைகோ எச்சரித்தார். தேனியில் அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படுத்த புதிய அணை கட்ட கேரளா முடிவு செய்துவிட்டது. அணை கட்டுவதற்கு தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டு விட்டன. அலுவலகமும் திறக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும் புதிய அணை கட்டுவார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை என்ற நிலைபாட்டிற்கு கேரள அரசு வந்துள்ளது.
நெய்யாற்று கால்வாயில் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு தண்ணீர் தரவில்லை. முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தீங்கு ஏற்படுத்தினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கேரள மக்கள் யோசிக்க வேண்டும். இன்றைக்கு நான் அமைதி வழியில் போகிறேன். வன்முறையில் ஈடுபட்டதில்லை. ஈடுபடப்போவதும் இல்லை. தங்களது வாழ்வாதாரம் அழிந்துவிடும் நிலை வரும் போது மக்களுக்கு பயமும், ஆத்திரமும் ஏற்படும். கேரளாவிற்கு எந்த பொருட்களும் செல்லாது. நாளை ஆயிரம் தெலுங்கானாக்கள் உருவாகும். புதிய அணை கட்டுவதை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் தடுக்க முடியாது என்ற திட்டத்தில் கேரள அரசு உள்ளது. கலகம் பிறந்தால்தான் இனி நியாயம் பிறக்கும். தேனி மாவட்ட மக்களிடம் முல்லை பெரியாறு அணை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். டிச., 29ல் கேரளாவுக்கு செல்லும் பொருட்களை தடுத்து நிறுத்தும் போராட்டம் நடக்க உள்ளது என்றார்.
தினமலர் செய்தி எதிரொலி வாலிபருக்கு வைகோ பாராட்டு: தேனி அருகே அரண்மனைப்புதூரை சேர்ந்த வாலிபர் அழகர்ராஜா. சில தினங்களுக்கு முன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது பாம்பு கடித்த நண்பரை ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, கடித்த பாம்பை உயிருடன் கையில் பிடித்தவாறு டாக்டரிம் காட்ட ஆஸ்பத்திரிக்கு ஓடினார். இச்சம்பவம் குறித்து தினமலர் இதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. நேற்று தேனி வந்த வைகோ, அழகர்ராஜாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அழகர்ராஜாவின் நட்புணர்வு, துணிச்சலை தினமலர் இதழில் பார்த்து மெய்சிலிர்த்துவிட்டதாக கூறினார்.
நன்றி தினமலர்
தினமலர் வாசகர் கருத்து
Please dont comment on VAIKO. He is the genuine peron in politics and whether he is in jay or not, thats diffrent thing.
by R G Murugan,Dubai,United Arab Emirates 12/18/2009 9:41:56 PM IST
திரு கண்ணன், இந்திய இறையன்பை பற்றி கொஞ்சம் நீங்கள் விளக்கமாக வாசகர்களுக்கு சொன்னால் நல்லது, முன்னுற்றி இருபது தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றுள்ளனர், இப்பொழுதும் தாக்குதல் தொடர்கின்றது, நமக்கு கிடைக்கின்ற தண்ணிய பக்கத்து மாநிலத்து காரர்கள் தரமாட்டேன் என்கிறார்கள், நீங்கள் சொல்கின்ற இந்திய இறையாண்மை மேற்கண்டவைகள் தவிர்த்து சொல்கின்றீர்களா??? ஏன் என்றால் இந்திய அரசு எதுவுமே தெரியாது போல இருக்கின்றதே??, முடிந்தால் நீங்களாவது விளக்கம் கொடுங்கள். வைகோ போன்றவர்கள் இல்லாவிட்டால், இலங்கை ராணுவம் தமிழ்நாட்டிலும் வந்து அடிக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு கடலோர காவல்படை வீரர்களை கூடிக்கொண்டு போய்விட்டார்கள். அது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் நம் நிலைமை கொஞ்சம் யோசித்து பாருங்கள்!!!
by M பாண்டியன் ,Chennai,India 12/18/2009 3:58:59 PM IST
நன்றாக சொல்லி விட்டீர்கள் w சுப்ரஜா.
by S ராம்,Chennai,India 12/18/2009 3:47:28 PM IST
யார் காமெடியன் மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தவர், அதை பாராட்டிய நீங்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுக்காமல் கலைஞரிடம் கொடுத்தவர்களை திரும்ப வெற்றி பெற செய்த நீங்கள். வைகோவின் இந்த போராட்டம் தோல்வி அடைந்தால், தமிழ்நாடில் இன்று ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, நாளை இலவசமா வய்க்குஅரிசி
by k karnan,singapore,India 12/18/2009 3:38:57 PM IST
தமிழனுக்கு எங்கே அநியாயம் நடதாலும்...அங்கே முதல் குரல் கொடுப்பவர் தான் திரு வைகோ ..எல்லாரும் பின்பு வந்து அரசியல் லாபம் தேடுவர் ...இது பல நேரங்களில் நடத்துள்ளது ..இதை அவரை தவறாக புரிதுள்ளவர்கள்.. தெரிந்து கொள்ள வேண்டும்
by aj thilipkumar,abudhabi,United Arab Emirates 12/18/2009 3:27:59 PM IST
குவாட்ரும், பிரியாணியும் வாங்கி பழகிய இவர்களுக்கு வை கோ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி இவர்கள் காமெடி பண்ணி, உண்மையை உணர்த்தும் வை கோ வை கிண்டல் செய்கிறார்கள்.
by Gopinath,Chennai,India 12/18/2009 2:51:33 PM IST
Vaiko is one of the best politician In Tamilnadu
he only bring up voice for tamil/tamil nadu. beacuse now every one admire rulling party and it leader... dont throw bull sit on him.. he
need no most need for us
by M Gurusamy,singapore,Singapore 12/18/2009 2:33:11 PM IST
வை.கோ விற்கு ஆதரவாக இத்தனை பேர் எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் அரசியல் நிலைப்பாட்டில் தவறிருக்கலாம். ஆனால் நேர்மையான தலைவர் வை.கோ. வாசகர்களின் அரசியல் உணர்வுகளுக்கு நன்றி. வை.கோ. அவர்களே பத்து தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி இந்த விழிப்புணர்வை மீட்டு எடுங்கள். பிறகு மீதியை மக்கள் பார்த்து கொள்வார்கள்.
by M Pandiarajan,Theni,India 12/18/2009 2:24:45 PM IST
ஹலோ கலிபோர்னியா ஸ்ரீதர்
கவிதை நல்ல இருக்கு. ஆனால் இது வைகோ விற்கு பொருந்தாது. அவரை பற்றி நீங்கள் தெரிந்தது இவ்வளவுதான்.
by யாஸ்மின் ,kuching,Malaysia 12/18/2009 1:27:51 PM IST
வைகோ ஒரு சிறந்த ஒப்பற்ற அரசியல் தலைவர். அவர் மட்டுமே இப்போது தீவிரமாக மக்களின் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகிறார். அதுவும் முல்லை பெரியார் அணை. இது ஒரு வாழ்வாதார பிரச்சினை. தாய் தமிழ் நாட்டை காப்பாற்ற விரும்புகிறார். விவசாயம் இல்லாமல் ஒருநாளும் பிழைப்பு நடத்த முடியாது.
by v வெங்கடேஷ்,Bargur Krishnagiri DT,India 12/18/2009 1:26:16 PM IST
ஸ்ரீதர்..ஒன்னு புரிந்து கொள்ளுங்கள்..''.? என்னையும் என் மனைவியையும் போலே வாழுங்கள் என மணமக்களை வாழ்த்துகிற ஒரே தலைவன் வைகோ...தனிமனித ஒழுக்கமும்..தன்னிகரில்லா தியாகமும் தான் அவரின் தாரக மந்திரம்.. தமிழனின் பண்பாட்டு கலாச்சாரங்களை பின்பற்றி..வாழ்ந்துவரும் வாழ்வியல் உதாரணம் அவர். வைகோ-வை உயிராக எண்ணக்கூடிய தொண்டர்கள்தான் அவரை வழிநடத்து கிறார்கள்,..அவரது பேச்சிலும் மூச்சிலும் சத்தியம் இருக்கிறது...அவரது வாழ்க்கை முறைகளை பின்பற்றி வாழ்ந்தாலே ஒரு முழுமையான வாழ்க்கையை வாழமுடியும்.கடந்த பதினாறு வருட தனி கட்சி அரசியலில் பல தோல்விகளை, துரோகங்களை,கடுமையான விமர்சனங்களை கடந்து இன்று வரையிலே ஒரு ''''ஆக்டிவ்'''' அரசியல் தலைவனாக வலம் வரும் வரலாற்று நாயகன் வைகோ...!நாடாளுமன்றத்தில் இந்திராவை தம் வாத திறமையால் புருவம் உயர்த்த வைத்தவர்..ராஜூவை கேள்விகளால் கலங்கடித்தவர்...வி.பி சிங்கை தலை நிமிர்த்தி பார்க்க செய்தவர்...அனல் பறக்கும் விவாதங்களில் முத்திரை பதித்தவர்...அல்லல் படும் தமிழனுக்கெல்லாம் ஒரே ஆறுதல் அவர்தான்..தன்னை வைகோவின் தொண்டன் என்று சொல்லிக்கொள்ள அக்கட்சி தொண்டர்கள் நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறார்கள்...
by RM கரிகாலன் ,Singapore,India 12/18/2009 1:24:57 PM IST
கடமையை முழு மனதோடு செய்கிறீர்கள் பாராட்டுக்கள்....காலம் ஒரு நாள் கனியும்....ஏசுவோர் வசை பாடுவோர் உங்கள் மன உறுதிக்கு உரமிடடும்...
by m mannan,madurai,India 12/18/2009 12:31:37 PM IST
வைகோவை கட்சியல் இருந்து அப்பாற்பட்டு தமிழனாக பாருங்கள் தமிழர்களே .வாழ்க தமிழன்
by tamil indian,tamilnadu,India 12/18/2009 12:30:07 PM IST
வைகோ வை கட்சியல் இருந்து அப்பாற்பட்டு தமிழனாக பாருங்கள் தமிழர்களே
by tamil tamilan,tamilnadu,India 12/18/2009 12:25:40 PM IST
அய்யா இனியும் பேசி பேசி தாமதிப்பதை விட அணை உடைப்பு போராட்டம் ஒன்றை துவக்குவோம். ஒரு சில இடங்களில் உள்ள அணைகளை உடைத்தால் தான் அவர்களுக்கும் பயம் இருக்கும். நாம் வெறுமனே போராட்டம் நடத்தினால் பலன் கிடையாது. தண்ணீர் தரமறுக்கும் அணைகளில் அணை உடைப்பு போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்
by C வெங்கடேசன்,channai,India 12/18/2009 12:20:34 PM IST
வைகோ போல் தன்னலமற்ற தலைவரை எந்த மானமுள்ள தமிழனும் குறை சொல்லமாட்டன். என்ன செய்வது சில மோசமானவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல என்னத்தை வழங்க ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்
by D Sukumar,chennai,India 12/18/2009 11:55:18 AM IST
இங்க கருத்துகளை பதிவு செய்பவர்கள் கொஞ்சம் சிந்தனை பண்ணி எழுதுங்க சாமிகளா...இந்த முட்டா பசங்க ரவி, சிவா மற்றும் திலிப் மாதிரி ஆளுங்க இருக்கிறதால தமிழர்களோட ஒற்றுமையே போய் விடும்...மக்களோட வாழ்வாதாரங்களுக்கான பிரச்சனைகளை வைத்து சும்மா தமாஷ் பண்ண வேண்டாம்..
உங்க தலைல நீங்களே புழுதிய வாரி வச்சுக்க வேணாம்....அவர் ஒருத்தராவது எதுக்குரார்ல கொஞ்சம் மூடிட்டு உக்காருங்க....
one more fool has also joined his name in their group....Mr.Bharathi thamilan....ஏன்டா பாரதியார் பேர வச்சுட்டு இப்டி எழுதுறீங்க....
by r m,chennai,India 12/18/2009 11:43:05 AM IST
முல்லை பெரியாரை தடுத்து புதிய அணை கட்டுவதை மத்திய அரசு,மாநில அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். இதுவே தமிழர்களின் பணிவான வேண்டுகோள். ராமநாதன்,ராமநாதபுரம்.
by v ramanathan,ramanathapuram,India 12/18/2009 10:46:46 AM IST
என அருமை தமிழ் மக்களே, திரு வைகோவை பத்தி அவதுறு எழுதும் தமிழர்களே. வைகோ சுயநலமில்லா மனிதர், எந்த பதவியம் இல்லாமல் தமிழர்களுக்காக வாதாடுகிறார். அவர் என்றுமே தனது கொள்கையை மாத்துவது இல்லை. அதலால் தயவு செய்து அவரை கேலி செய்வதை நிறுத்துங்கள்.
உண்மையுள்ள தமிழன்.
ச. முருகன், மும்பை
by S முருகன்,Mumbai,India 12/18/2009 10:34:02 AM IST
Dear Tamilians,
It is not time to see whether he is a hero or comedian, it is a time to think what message he is talking all about. I beg all Tamilains please join your hands together to survive.
Keralities is using Tamilnadu for their livelihood, in return what they are giving? Still we are teasing each other, you guys are putting same to our community. If can do come front or else go to the cinema and make poja for your favorite actors for their pictures.
True Tamilains please come front and fight for the things which is imperative for our future generation life.
Victory for land of Tamil (Tamil Nadu),Sankar
by S சங்கர்,Pune,India 12/18/2009 10:09:15 AM IST
Vaiko comments is correct and get benefit for our TN People. Congratulation to VAIKO
by R RAJ,Chennai,India 12/18/2009 9:45:36 AM IST
எப்பொழுது எல்லாம் வைகோ போன்றவர்கள் நியூஸ் தினமலர் பத்திரிகையில் வந்தாலும், இந்த ஸ்ரீதர், ரவி, சிவேநேசன், சிவா போன்றவர்கள் கருத்து எழுத வருவார்கள். நாம் அவர்களை வரவேற்கின்றோம். ஆனால் அவர்கள் கருத்தினை கூர்ந்து கவனித்தால், எதோ வைகோ வை அரசியலில் இருந்து விரட்டவேண்டும் என்ற நோக்கிலும், தமிழர்களின் பிரச்சனைகளை புரியாதவர்களாக இருப்பது போல தெரிகிறது. மேற்கண்ட நண்பர்கட்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு வைகோ வை விமர்சிக்க வேண்டும் என்றால் அவர் செய்கின்ற தவறினை சுட்டிக்காட்டலாம். ஆனால் அவர் செய்கின்ற நல்ல காரியங்களியும் நாம் பாராட்டுவது கருத்து எழுதுபவர்களின் கடமை. இன்றைய சூழ்நிலையில் வைகோ போன்றவர்கள் போராட்டமும் அரசியல் தலைமையும் தமிழ்நாட்டிற்கு தேவை. நாம் பார்த்து விட்டோம். நாற்பது ஆண்டுகால சினிமா தலைவர்களை, தமிழ்நாட்டை சுற்றி நான்கு புறமும் இழந்தது ஏராளம். தயவுசெய்து தமிழ்நாட்டின் நிலைமை அறிந்து கருத்து எழுதுங்கள்
by S Manohar,Chennai,India 12/18/2009 9:32:03 AM IST
Sridhar,
All Readers, Vaiko is a Good Leader in TN.
He should always support and give voice the to tamil peoples.
Don''''t blame him.
Pushparaj
Karala
by R புஷ்பராஜ்,Karala,India 12/18/2009 8:47:22 AM IST
வைகோ-வை பற்றிய செய்தியை பார்த்தாலே சிலர் ஓடிவந்து அறிவு ஜீவிகளை போல் நக்கலடிப்பது அவர்களின் அறியாமையை வெளிக்காட்டுகிறது...''''எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.''''என்று சொன்ன வள்ளுவன் பிறந்த தமிழ்நாட்டில் மான உணர்ச்சியும், மனிதாபிமானமும்,பகுத்தறிவும், இன உணர்வும் மங்கி போனதை இதை போன்ற விமர்சனங்கள் வெளிக்காட்டுகிறது.. எத்தனையோ தமிழர்களுக்கு இன்னும் இன்டர்நெட் என்பது எட்டாத கனியாக இருப்பதை எண்ணிப்பாருங்கள்...கிடைக்கின்ற இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பயனுள்ள கருத்துகளை வெளிபடுத்தினால் அது நல்லதொரு தகவல் பரிமாற்றமாக அமையும். இப்போதைய அரசியலில் நாட்டு நலன் குறித்து யாருமே கவலை படாத இந்த தருணங்களில் வைகோ-இதில் சற்று வித்தியாசபடுவதை மனசாட்சியோடு ஒத்து கொள்ள வேண்டும். நன்றி
by RM Karikalan ,Singapore,India 12/18/2009 8:21:53 AM IST
Mr.sridhar who are you to command Mr.vaiko the senior politician. You are sitting in USA and commenting the Indian politician.If you have real guts come back and join politics and do service.You can''''t even stand for a day.Do not pass hasty comments.If you want to write poem write about American politics , and Indians suffering in America and Australia ? write about poem about racism in America . Can u enter American restaurant in America , Write about that. What you know about Indian politics.You already ran away from homeland.You don''''t have any right to comment. control your fingers on keyboard.
by w suprajaa,Chennai ,India 12/18/2009 8:06:00 AM IST
தமிழனுக்காக, எந்த பலனையும் அடையாமல் எந்த சூழ்நிலையிலும் தனது தமிழ் ஆதரவு கொள்கையை விட்டுகொடுக்காமல், வாழும் ஒரே ஒரு உத்தமர் இவர். வைகோ வை பற்றி அவதூறு எழுதும் அன்பர்கள் யாரும் பூர்வீக தமிழ் குடிகளாக இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலே குடி புகுந்த புல்லுரிவிகள்தான் வைகோவை வசை பாடும்.
by R Sivakumar,Los Angeles,United States 12/18/2009 7:55:35 AM IST
நண்பர்களே, தோழர்களே, உடன்பிறப்புக்களே, இரத்ததின் இரத்தங்களே, மற்றும் என் தாய்திரு நாட்டின் சகோதர சகோதரிகளே, தமிழகத்தின் தன்னிகரற்ற வருங்கால தலைமகன்களே தயவு செய்து தமிழனுக்காக எந்த சந்தர்பத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் பாராளுமன்றம் வரையிலும் எவ்வித ஆதாயமும் பெறாமல் இன்றும் என்றென்றும் குரல் கொடுக்கும் ஒரே தலைவன் வைகோ என்பதை தமிழன் அனைவரும் உணரும் காலம் விரைவில் வரும். இது ஏற்படவில்லை எனில் நிச்சயம் கருணாநிதியின் சூழ்ச்சியில் தமிழின துரோகியின் சதி வலையில் நமது இன்னும் ஓர் தலைமுறை சாபக்கேட்டில் சிக்கி தவிப்பதை தடுத்து நிறுத்த இயலாது. மீண்டும் மீண்டும் நன்கு சிந்தியுங்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு மு. அகிம்சை பாண்டியன், அகிம்சா புரி தெற்கு நல்லிப்பட்டி, புதுக்கோட்டை (சிங்கப்பூர்)
by M. அகிம்சை பாண்டியன் ,agimsa puri (Pudukkottai),Singapore 12/18/2009 7:52:46 AM IST
பாராட்டுக்கள் திரு..வைகோ.
2 MLA வச்சிருக்கிற KCR தனி ஸ்டேட் டே வங்கிகிட்டார். இங்க வீரவசனம் பேசுகிற ஆட்கள் மட்டும் தான் அதிகம். தேனி மாவட்டத்துல 2 போகம் விவசாயம் நடக்கிறதே கேள்விக்குறியா இருக்கு.
அடுத்த வருஷம் கேரளாக்காரன் ஒருபோகம் விவசாயத்திற்கு தண்ணீர் விட்டாலே அதிகம். இந்த லட்சணத்தில தேக்கடியிலயிருந்து நேரடியா, மதுரைக்கு தண்ணி கொண்டுபோரதுக்கும் திட்டம் போட்டிருக்கார்கள். மதுரையில இருக்கிற யாரையோ குஷிபடுத்த செய்யிற வேல இது. வைகை அணையில் இருந்து மட்டும் தான் மதுரைக்கு தண்ணீர் எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்திலே இன்னும் குடிநீர் பிரச்னையும் தீர்ந்தபாடில்லை.
இல்லை என்றால் ஆண்டுக்கு 4 மாதம் வறட்சி காலத்தில் கிணற்று நீர் பாசனம் முழுவதும் நீர்த்து போகும். மொத்தத்தில் விவசாயம் சுருங்கினால் மனிதனுக்கு அழிவுதான்.
செய்தல் செய்யாடினும் இல் (பெரியாறு பிரச்சனையில் நன்றாக செயல்படாமல் உரிமையை கேரளாவிடம் இழந்தது)
செய்யாதல் செய்திடினும் இல். (தேக்கடியிலிருந்து தண்ணீர் எடுக்க முயற்சிப்பது)
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தேனி மாவட்ட மக்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். -
by Tamilan,USA,India 12/18/2009 7:16:47 AM IST
கலைஞர் இன்னும் கடிதம் எழுதலையா மத்திய அரசுக்கு !
வைகோ சார் பொறுங்க, நம்ம முதல்வர் உண்ணாவிரதம் இருந்து ஒரே நாளுல சாதித்து காட்டுவார்.
by T swami,OHIO,United States 12/18/2009 7:08:10 AM IST
''''உண்மையான நேர்மையான அரசியல்வாதி ''''
by S shan,Singapore,India 12/18/2009 7:07:56 AM IST
இங்கு சிலர் வைகோவை ஜோக்கர் என்றும் மற்றொரு வடிவேல் என்றும் திட்டி தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வைகோ இல்லாவிட்டால் நமக்கு உண்மை நிலவரம் எதுவும் தெரியாது. டேம் கட்டி முடித்ததுக்கு அப்புறமும் நாம் இந்த மாதிரி காமடி பண்ணி எல்லாத்தையும் இழக்க போகிறோம். தும்பை விட்டுட்டு வாலை பிடிப்பது எந்த விதத்தில் பயன் அளிக்கும் என்று தயவு செய்து யோசித்து பாருங்கள்.
by R ஜெகதீசன்,Singapore,Singapore 12/18/2009 7:03:52 AM IST
கருணாநதி அரசியலுக்கு வருமுன் எப்படி இருந்தார் இப்போது எப்படி இருக்கிறார். நரம்பிலாத நாக்கு எப்படி வேண்டும் என்றாலும் வார்த்தைகளை அள்ளிவிடும் சுயபுத்தி முதலில் நமக்கு வேலை செய்யட்டும் ,,,,.
by na ராம்ப்ரசாத் ,singapore,Singapore 12/18/2009 7:00:14 AM IST
''''கேரளா புதிய அணை கட்டினால் தெலுங்கானாக்கள் உருவாகும்: தேனியில் வைகோ எச்சரிக்கை''''.
இன்றைக்கு வைகோவுக்கு ''''சபாஷ் ''''.
தற்போது உள்ள இந்திய அரசியல் சூழலில், மத்திய அரசாங்கத்தை மிரட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.ஆனால் கிபி 6ஆம் நூற்றாண்டில் ''''தமிழ்'''' மொழியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட ''''மலயாளம்'''' பேசும் கேரள மக்கள்,இந்த வரலாறுகளை தெரிந்தும்,தம் மொழியை தோற்றுவித்த தமிழ் மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கின்றனர்.சில நேரங்களில்,இவ்விஷயங்களில் டெல்லி ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறதோ என்று என்ன தோன்றுகிறது.
வைகோ சொல்வது போல் ''''அணை கட்டுவதற்கு தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டு விட்டன. அலுவலகமும் திறக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும் புதிய அணை கட்டுவார்கள்'''' என்பதை பார்த்தால் கேரளா என்னமோ தான் தனிநாடாக உள்ளதுபோல் காட்டிகொள்கிறது.தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகள் தடுக்கபடாது என்றிருக்கும்வரை நாம் பொருத்துகொள்ளலாம்.இல்லையேல் வைகோவை ஆதரிப்பதில் தவறில்லை .
ஆனால் வைகோ தீவிர தமிழ்பற்று கொண்டவர்.தெலுங்கானாக்கள் உருவாகும் என்று தமிழ் பாசத்தால் சொல்லுவாரே தவிர தமிழனை இரண்டாக பிரிக்க துணைபோக மாட்டார்.
by அரசு (சென்னை),eunos,Singapore 12/18/2009 5:01:52 AM IST
mr siva what you know,why are you give chilly comments,mullai pariar is a big problem in tamil nadu,first you think then give comments
regards
mohan.p.
by p mohan,sharjah,United Arab Emirates 12/18/2009 4:55:42 AM IST
ஐயோ வை கோ சேட்டா, நீங்கள் பேசிட்டே இருங்கோ. நங்கள் அணை கட்டும். தண்ணி தராது - அச்சுதானந்தன்.
கொடுமைடா சாமி, தமிழன் மட்டும் கெஞ்சிக்கிட்டேதான் இருக்கனமா? வேகுது.
by k சோமன்,Doha,Qatar 12/18/2009 1:18:02 AM IST
நன்றி தினமலர்

