இந்திய பிரதமருக்கு காரைக்குடியில் மறுமலர்ச்சி தி.மு.க கருப்புக்கொடி

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, அரசியல், வறுமை

மாவட்டம்: சிவகங்கை

செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Fri, 23/12/2011

 

 

 

இந்திய பிரதமருக்கு காரைக்குடியில்
மறுமலர்ச்சி தி.மு.க கருப்புக்கொடி

தென்தமிழ் நாட்டின் வருங்காலத்தை நாசமாக்கும் விதத்தில், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க திட்டமிட்டு செயல்படும் கேரள அரசின் போக்கைத் தடுக்காமலும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வகை செய்யாமலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழக மக்களினுடைய எதிர்ப்பைக் காட்டவும், கண்டனம் தெரிவிக்கவும், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு 2011 டிசம்பர் 26 ஆம் தேதி காரைக்குடியில் கருப்புக்கொடி காட்டும் அறவழிப் போராட்டம்” நடைபெறும்.

இப்போராட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன் ஆகியோர் தலைமை ஏற்பார்கள். இந்த அறவழிப் போராட்டத்தில் கழகத் தோழர்களும், விவசாயப் பெருமக்களும், தமிழக உரிமைக் காப்பாளர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்.

 

‘தாயகம்’                                    வைகோ
சென்னை - 8                              பொதுச் செயலாளர்,
23.12.2011                                   மறுமலர்ச்சி தி.மு.க

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)