மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, தொழிலாளர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Fri, 30/12/2011

 

 

 

 

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் திரு செ.முத்து அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு சு.துரைசாமி அவர்கள் முன்னிலையில் 29.12.2011 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், சென்னை தாயகத்தில் உள்ள ம.தொ.மு. அலுவலகத்தில் நடைபெற்றது.

இணை பொதுச் செயலாளர் எஸ்.வி.பரமசிவம், செயலாளர்கள் எஸ். மகபூப்ஜான், தா.சுப்பிரமணியன், மு. செந்திலதிபன், சு.ஜீவன், கி.திருநாவுக்கரசு, இரா.அந்திரிதாஸ், பி. கோபாலகிருஷ்ணன், குமரி விஜயகுமார், ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

1. தொழிலாளர் நீதி மன்றங்கள்:
தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர் நீதி மன்றங்கள் குறிப்பாக சேலம், திருச்சி தொழிலாளர் நிதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக நீதிபதி நியமிக்கப்படவில்லை. சென்னையில் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஓராண்டாக நீதிபதி நியமிக்கப்படாத காரணத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர் நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை உடனடியாக நியமிக்க வேண்டுமென இச்செயற்குழுக் கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.

2. பென்சன்:
இந்திய நாடு முழுவதிலும் வருங்கால வைப்பு நிதியில் சந்தாதாரர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்கள் பெறும் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவிகிதம் தொழிலாளர்களிடமும் மற்றும் நிர்வாகத்திடம் 12 சதவிகிதமும் மாதாமாதம் பிடித்து வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது. மேற்காணும் தொகையினை பிற்காலத்தில் தொழிலாளர்களுக்கு மொத்தமான தொகையாக கிடைத்து வந்தது.

மத்திய அரசு நிர்வாகத்தினர் செலுத்தும் 12 சதவிகிதத்திலிருந்து 8.33 சதவிகிதத்தை எடுத்து ஓய்வு ஊதிய திட்டத்திற்கு செலுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் தொகையிலிருந்து ஓய்வூதியமாக (பென்சன்) தொழிலாளர்களுக்கு ரூ.500/-க்கும் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசும், மத்திய அரசும் 60 வயது தாண்டிய பொதுமக்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கி வருகின்றது. எந்தவிதமான பங்களிப்பும் இல்லாமல் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

ஆனால் வருங்கால வைப்பு நிதியில் சந்தாவாக உள்ள தொழிலாளர்கள் தங்கள் பணத்தில் மாதம் 8.33 சதவிகிதம் செலுத்தியும்கூட அவர்களுக்கு மாதம் ரூ.500/-க்கும் குறைவாக கோடிக்காணக்கான தொழ்லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.115 என அறிவித்துள்ளது. நாற்பது ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வயதன காலத்தில் ஏராளமான மருத்துவ செலவுகள் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் கணக்கில் எடுத்துக்கொண்டு வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு மாதம் ரூ.3500/- ஓய்வூதியம் கிடைக்கத்தக்க முறையில் நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு உதவ வேண்டுமென இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்:
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கட்டண உயர்வுக்குப் பின்னர் அதிக லாபம் ஈட்டுவதால், போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்கிட வேண்டுமென போக்குவரத்து அமைச்சரையும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களையும் இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. பணி மூப்பு அடிப்படையில் போஸ்டிங் வழங்கிடுக:
போக்குவரத்துக் கழகங்களில், நாள்தோறும் பணி வழங்குவதில் (போஸ்டிங்) பல்வேறு வகையான முரண்பட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால், பணி மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் பணி (போஸ்டிங்) வழங்கிட வேண்டுமென போக்குவரத்து அமைச்சரையும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களையும் இச்செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

5. சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு:
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளையும் வழங்கக் கோரி கடந்த 3 ஆண்டுகளாக மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி வலியுறுத்தியும் கூட அவைகளை கடந்த கால தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஏறிவரும் விலைவாசி, மாறி வரும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை குறைந்த ஊதியம் பெற்றுவருகிற சர்க்கரைத் தொழிலாளர்களால் ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக கூட்டுறவு பொதுத்துறை தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை உடனடியாக வழங்கிட இக்கூட்டம் கோருகிறது.

(சு.துரைசாமி,)
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)