முல்லைப் பெரியாறு உரிமை காக்க தமிழகமே கொந்தளிக்கிறது. உயிரை மாய்த்துக்கொள்ள முனையாதீர்கள்! வைகோ உருக்கமான வேண்டுகோள்!

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், விவசாயம், மருத்துவம், மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல், வறுமை, புறநகர்

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்

Date: 
Thu, 29/12/2011

 

 

 

 

 

முல்லைப் பெரியாறு உரிமை காக்க தமிழகமே கொந்தளிக்கிறது.
உயிரை மாய்த்துக்கொள்ள முனையாதீர்கள்!
வைகோ உருக்கமான வேண்டுகோள்!

 

தேனி மாவட்டத்தில் சின்னமனூரைச் சேர்ந்த இராமமூர்த்தி என்னும் இளைஞர் முல்லைப் பெரியாறு அணையைக் காக்க இன்னும் தீர்வு ஏற்படவில்லையே என்று மனம் உடைந்து விஷம் அருந்தி உயிர்நீத்துள்ளார் என்ற செய்தி தாங்கமுடியாத மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தான் எழுதியுள்ள கடிதத்தில் ‘சீலையம்பட்டி இடிமுழக்கம் சேகர் முல்லைப் பெரியாறைக் காக்க உயிரைத் தந்தார். தேனி ஜெயப்பிரகாஷ் நாராயணன் தீக்குளித்து அவரது உயிருக்கு ஆபத்து. இதற்குப் பின்னரும் நமது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.’ எனவே இதோ என் உயிரையும் தருகிறேன் என்று தெரிவித்து விட்டு தன்னை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி கேட்டவுடன் துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து மொத்தத் தமிழகமும் முல்லைப் பெரியாறைக் காக்க கிளர்ந்து எழுந்துள்ளது. எனவே, வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முனைய வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்த் தியாகம் செய்த இராமமூர்த்தியை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது சகோதரர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

‘தாயகம்’                             வைகோ
சென்னை - 8                       பொதுச் செயலாளர்,
28.12.2011                            மறுமலர்ச்சி தி.மு.க

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)