கிறிஸ்துமஸ் வாழ்த்து வைகோ
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், தேசிய, புறநகர்
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
கிறிஸ்துமஸ் வாழ்த்து
வைகோ
துன்பங்களும் துயரங்களும் இடையறாது முற்றுகையிடும் மனித வாழ்க்கையில், அப்படி அல்லலுக்கு ஆளாகும் சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கும் வாழ்வே மகத்தானது என்ற உன்னதத்தை கல்வாரியின் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் உலகத்திற்கு உணர்த்திய இரட்சகர் இயேசு கிறிஸ்து அவதரித்த நாளைக் கொண்டாடும் பெருவிழாதான் கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.
ஆபத்துகளும் அதிர்ச்சிகளும் சூழும்போதெல்லாம் மனிதர்கள் இயேசு பெருமானின் பெயரை மனதில் உச்சரித்து அவரது உபதேச மொழிகளை நினைத்து ஆறுதல் பெறுகிறார்கள். “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன் மலையின்மேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது,” என்றார் இயேசுநாதர்.
பலமான அடித்தளம் அமைக்கப்பட்டால், அணைக்கட்டானாலும் வீடானாலும், எந்த அமைப்பானாலும் அது சேதப்படாது என்பதை உணர்த்தினார். அடுக்கடுக்கான சோதனைகள் தமிழகத்தை வளைக்க முற்படும் இன்றைய சூழலில் மன உறுதியுடனும், மனித நேயத்துடனும் தமிழக மக்கள் அச்சோதனைகளை முறியடித்து வளமும் நலமும் பெற இயேசுநாதரின் போதனைகள் துணை செய்யும்.
உலகம் எங்கும் கொண்டாடப்படும் இக்கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
24.12.2011 மறுமலர்ச்சி தி.மு.க

