மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் வைகோ அறிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, Chennai - Central, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், வைகோவின் பதில்கள்

Date: 
Wed, 09/12/2015

 

 

 


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளின் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை
தமிழக அரசே செலுத்த வேண்டும்


வைகோ அறிக்கை

 

மிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட நீர்ப்பாசனப் பயிர்களை அழித்துவிட்டது.

 

வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது. இந்நிலையில், விவசாயப் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுப் பிரிமியத்தை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா, அடங்கல் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இணைய சேவைகள் முற்றிலும் செயலிழந்து உள்ளதால், விவசாயிகள் சிட்டா, அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சென்னை மாநகரம் மழை வெள்ள சேதத்தால் பெரும் சீரழிவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை இரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெள்ளத்தால் சீர்குலைந்த சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை இரத்து செய்திட கல்வி நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 

தாயகம்,                                                           வைகோ
சென்னை - 8                                          பொதுச்செயலாளர்,
09.12.2015                                                  மறுமலர்ச்சி தி.மு..

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)