பெரிய பாண்டியன் வீர மரணம்! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 13/12/2017

 

 

 

 


பெரிய பாண்டியன் வீர மரணம்!

வைகோ அறிக்கை

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் செ.பெரிய பாண்டியன், கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக இராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றபோது இன்று 13.12.2017 அதிகாலையில், கொள்ளையர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து துடித்துப் போனேன்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் புகழ்பெற்ற கிராமங்களுள் ஒன்றான மூவிருந்தாளி கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து, காவல்துறையில் சேர்ந்து, தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் நேர்மையை நிலைநாட்டி, காவல்துறை உயர் அதிகாரிகளிடமும், பொதுமக்களிடமும் பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றவர் பெரிய பாண்டியன். உயிரைத் துச்சமாகக் கருதி, மூன்று பிரபலமான கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில்  நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூவிருந்தாளி ஊர் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுடைய வேதனையில் பங்கேற்கின்றேன்.

பெரியபாண்டியின் இரு மகன்களின் (18, 14 வயது) கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  குடும்பத்தில் தகுதியானவருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும். மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் பெரிய பாண்டி குடும்பத்தினர் இலவசமாக வழங்கிய நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளிக்குப் பெரிய பாண்டியின் பெயரைச் சூட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மூத்த மகனை இழந்து வாடும் தாயார், மனைவி, பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாயகம்                                                        வைகோ
சென்னை - 8                                      பொதுச்செயலாளர்
13.12.2017                                               மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)