நடப்புப் பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலை நான்கhயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்க! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், மனித உரிமை, வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 15/12/2017

 

 

 

நடப்புப் பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலை
நான்கhயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்க!

வைகோ அறிக்கை

ரும்பு கொள்முதல் செய்திட நடப்புப் பருவத்திற்கு மாநிலப் பரிந்துரை விலை (SAP) நிர்ணயம் செய்யாமல் கரும்பு விவசாயிகளை பெரும் அதிருப்தியில் தள்ளி இருக்கிறது தமிழக அரசு. மாநிலப் பரிந்துரை விலை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாகவோ அல்லது அக்டோபர் மாதத்திலோ நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை. முத்தரப்புக் கூட்டத்தை நடத்தி, கரும்பு கொள்முதல் விலையைத் தீர்மானிக்கும் முறையை அதிமுக அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாகவே செயல்படுத்தாமல் தன்னிச்சையாக கொள்முதல் விலையை அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் கரும்பு அறுவடை முடிந்து, சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் இன்னமும் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்கவில்லை.

மத்திய அரசு நடப்பு கரும்புப் பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,400 என்று நிர்ணயித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 2016-17 இல் ரூ.2,300 என்று மத்திய அரசு தீர்மானித்த விலையில், கூடுதலாக மாநிலப் பரிந்துரை விலையாக ரூ.450 மற்றும் போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் சேர்த்து ஆக மொத்தம் டன் ஒன்றுக்கு ரூ.2,850 என்று கரும்பு கொள்முதல் விலை தீர்மானிக்கப்பட்டது.

கரும்பு உற்பத்திச் செலவு அதிகரித்து இருப்பதும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்ற கhரணங்களால் கரும்பு விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக தீர்மானிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வரும் நிலையில், கடந்த ஆண்டு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு 2012 -13 இல் 8 இலட்சம் ஏக்கராக இருந்தது. ஆனால் தற்போது 3 இலட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. கடந்த 2016 -17  ஆம் ஆண்டு 119 லட்சம் டன் கரும்பு அரவைக்கு வந்தது. ஆனால் நடப்பாண்டில் கரும்பு உற்பத்தி 50 விழுக்கhடு குறைந்து விட்டதால், 79 லட்சம் டன் மட்டுமே அரவைக்கு வரும் நிலை இருப்பதாக தமிழக அரசின் சர்க்கரைத் துறைக் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் பத்திரிகைகளில் வெளிவந்து இருக்கிறது.

கரும்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்கhமலும், சர்க்கரை ஆலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளுக்ககு மாநில அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை முழுமையாக வழங்கhமல் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையாக வைத்துள்ளதாலும் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கரும்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு சர்க்கரை விலை கிலோ 27 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 39 ரூபாயாக உயர்ந்திருப்பதால் சர்க்கரை ஆலைகள் பெரும் இலாபம் ஈட்டி உள்ள நிலையில், விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிக்கhமல் ஏமாற்றி வருவது ஏன் என்று தட்டிக் கேட்கhமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.

எனவே, தமிழக அரசு இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு கரும்புப் பருவத்திற்குக் கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் ரூபாய் என்று தீர்மானிக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்பு கொள்முதலுக்கhன நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத்தர  உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


தாயகம்                                                                         வைகோ
சென்னை - 8                                                       பொதுச்செயலாளர்
15.12.2017                                                               மறுமலர்ச்சி தி.மு.க.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)