மனிதநேய மாண்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) மீலாது நபி திருநாள் - வைகோ வாழ்த்து

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 01/12/2017

 

 

 

 


மனிதநேய மாண்பாளர் நபிகள் நாயகம் (ஸல்)

மீலாது நபி திருநாள் - வைகோ வாழ்த்து

ண்ணல் முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவதார தினத்தை, மீலாது நபி என உலகு எங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஹீரா மலைக்குகையில் திருவருளால் கிடைக்கப் பெற்ற இறைச் செய்தியை, மனிதகுலம் போற்றும் ஒரு மார்க்கமாக நிறுவி, கல்லடியும் சொல்லடியும் எதிர்கொண்டு, துன்பங்கள் நிறைந்த பயணத்தை நடத்தி, தங்களை விட எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகம் உள்ள ஆயுதம் ஏந்திய படைகளை எதிர்த்து வீரச்சமர் புரிந்து வெற்றியும் கண்டு இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரின் பிறந்தநாளைத்தான் இன்று உவகையுடன் இஸ்லாமிய உலகம் கொண்டாடுகிறது.

இறைவனை வணங்கி வாழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம்; எளியோர்க்கு வழங்கி வாழ்வோம் என்று சமூக ஒற்றுமைக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் பாதை அமைத்த நபிகள் (ஸல்) பெருமானாரின் சாதனைகள் இன்றைய மனிதகுலத்திற்கு ஒளியூட்டுகின்றன.

ஒருபோதும் மது அருந்தாதீர்கள். ஏனென்றால், தீமைகளுக்கெல்லாம் அது மூல ஆதாரமாக அமைந்து உள்ளது. எல்லா இழிவான செயல்களுக்கும் முதன்மையாக உள்ள மது, எல்லா பாவங்களின் மொத்தத் தொகுப்புஎன்று, மதுவை ஒழித்திடவும், மதுவிலக்கை கட்டாயமாக்கிடவும் செய்திட்ட ஒப்பற்றவர் அண்ணல் முகமது (ஸல்) அவர்கள்.

பசி உள்ளோருக்கு அன்னம் இடுங்கள்; நோயாளிகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரியுங்கள்என்று, மனிதநேயத்தைப் போதித்த மாண்பாளர் ஆவார்.

உத்தமத் திரு நபிகள் (ஸல்) நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது.

அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் மீலாது விழாக்களில் பங்கேற்று நபிகள் பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து மத நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் வகையில் செயல்பட்டனர்.

அகிலம் எங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் உவகையுடனும், நம்பிக்கையுடனும் போற்றுகின்ற திருநாளாகிய நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நன்னாளில், அவர்கள் கhட்டிச் சென்ற அறநெறியினைப் பின்பற்றி, அன்புடனும், சகோதர பாசத்துடனும், அனைவரும் வாழ்ந்திட உறுதிகொள்வோம் என்று மீலாது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


தாயகம்                                                                               வைகோ
சென்னை - 8                                                             பொதுச்செயலாளர்
30.11.2017                                                                      மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)