பொங்கல் வாழ்த்து. இரா.கு.இராம் சுந்தர்.

விவகாரங்கள்: தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: அபிப்ராயம்

Date: 
Thu, 28/01/2010
இறந்தகாலத்தை
 
நிகழ்காலத்  தொடராக்கி
 
நிகழ்காலத்தை
 
இறந்தகாலமாக்கி  
 
மனிதநேயத்தை 
 
மண்ணில்
 
புதைக்கும் 
 
மூடத்தனத்தை
 
முற்றிலும்
 
ஒழிப்போம்!
 
 
நம்முள்
 
பிரிவினை ஏற்படுத்தும்
 
எற்றதாழ்வுகள் எதுவாயினும்
 
அவற்றை
 
போகியில் 
 
பொசுக்குவோம்!!
 
 
நம்மைப்
 
பொறுத்தவரை
 
ராமனும் பாபரும்
 
கரையான் அரித்த
 
வரலாற்றுப்  புத்தகத்தில்
 
வரை(ந்த) படங்களாகவே
 
இருக்கட்டும்!!
 
 
மசூதியின் கற்களில்
 
அடுப்பமைத்து
 
ராமன் பாதுகைகளை
 
விறகாக்கி
 
ஒற்றுமைப்   பானையில்
 
அன்பெனும் அரிசியில்
 
பண்பெனும் பாலூற்றி
 
நேசமெனும் சர்க்கரை
 
கலப்போம்...
 
இனி
 
பொங்கட்டும்
 
சமதர்மச் சமுதாயம்..
 
 
தை
 
திருநாளில்
 
நல்ல விதைகளை
 
நம் மனதில் 
 
விதைப்போம்..
 
ஏனெனில்
 
நம் 
 
சந்ததிகளாவது
 
களைகளே
 
இல்லாத
 
விளை
 
நிலங்களாய்
 
உருவாகட்டும்!!
 
 
இதுவரை 
 
இந்நாட்டு
 
மன்னர்களாய்
 
வாழ்ந்தது
 
போதும்
 
இனிமேலாவது 
 
மனிதர்களாய்
 
வாழ முயற்சிப்போம்!!!
                                    
என்றென்றும் அன்புடன்,

இரா.கு.இராம் சுந்தர்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)