கேரளத்தில் தாக்கப்பட்ட சாந்தவேலுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை! வைகோ கோரிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Wed, 18/01/2012

 

 

 

கேரளத்தில் தாக்கப்பட்ட சாந்தவேலுவின் மரணத்திற்குக்
காரணமானவர்கள் மீது நடவடிக்கை!
வைகோ கோரிக்கை

டந்த 9-ஆம் தேதியன்று கேரளத்தில் பம்பா எனும் இடத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றிருந்த பக்தர் சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தவேல் என்பவர் மீது கேரளத்தினர்  கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் உடம்பெல்லாம் வெந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

நடந்த சம்பவத்தை மூடிமறைத்து பொய்யான அறிக்கையைக் கேரளத்தின் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

எனவே, சாந்தவேலின் கொலைக்குக் காரணமான கொடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். பரிதாபகரமாக உயிரிழந்த சாந்தவேலின்  குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மறைந்த சாந்தவேலின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாயகம்                                வைகோ
சென்னை - 8                        பொதுச் செயலாளர்,
18.01.2012                             மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)