பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல், புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மரண தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்குப் பின்னர், இந்த வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதி டத்து, நீதிபதி பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு, நீதி அரசர் சிங்வி, நீதிபதி முகோபாத்யாயா அமர்வில் விசாரிக்கப்பட்டதால், இந்த வழக்கு அதே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் அவர்களும் இன்றைய விசாரணையில் பங்கு ஏற்றனர்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
11.01.2012

