தொடரிகள் கட்டண மறுசீரமைப்புக்குழுவின் பரிந்துரைகளை நிராகரித்திடுக! வைகோ அறிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 19/01/2018

 

 

 

தொடரிகள் கட்டண மறுசீரமைப்புக்குழுவின்

பரிந்துரைகளை நிராகரித்திடுக!

வைகோ அறிக்கை

விவேக் தேப்ராய் தலைமையிலான குழு, தொடரித்துறையை முழுமையும் தனியார் மயமாக்கிட வேண்டும் என்று திட்டங்களை அளித்துள்ளது. அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று ‘நிதி ஆயோக்’, மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது. எனவே,  இரயில்வே துறை நட்டத்தில் இயங்குவதாகக் காரணம் காட்டி தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

தத்கல் முறையில் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினார்கள்; சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற அதிவேகத் தொடரிகளில், புதிய கட்டண முறை என்று சொல்லி, கட்டணங்களை உயர்த்தினர். இதனால் அதிவேக இரயில்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகி கூட்டம் குறைந்தது. சாதாரண எளிய மக்கள் இரயில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்தோடு தொடரித்துறை செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

தற்போது தொடரிக் கட்டண முறையை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, மேலும் வருவாயைப் பெருக்குவதற்காகப் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

வானூர்திகள் மற்றும் நட்சத்திர தங்கும் விடுதிகளில் உள்ளதைப் போல

டைனமிக் கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்;

வானூர்திகளில் முன்வரிசை இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணம் வாங்குவது போன்று

தொடரிகளில் ‘லோயர் பெர்த்’ எனப்படும் கீழ் இருக்கை தேவைப்படுவோரிடம்

கூடுதல் கட்டணம் வாங்க  வேண்டும்;

விழாக் காலங்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்;

உணவக வசதி கொண்ட தொடரிகளில் பிரிமியம் முறையில் கூடுதல் கட்டணம் விதிக்கலாம்;

என அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு எதிரானவை; ஏற்றுக் கொள்ள முடியாதவை.

பண்டிகைக் காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தொடரிகளையே நம்பி உள்ள நிலையில் ‘ஆம்னி’ பேருந்துகளைப் போல கட்டணத்தை உயர்த்துவது பகல் கொள்ளை ஆகும். கீழ் இருக்கை வேண்டும் தேவைப்படும் மூத்த குடிமக்கள், நோயாளிகள், பெண்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்பது, மனிதாபிமானம் அற்றது.

‘நிலக்கரிக்கான சரக்குக் கட்டணம் ஒரு டன்னுக்கு ரூ. 153.20 என்று மாற்றி அமைத்ததன் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்’ என்று தென்னக இரயில்வே ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொருளாதார இழப்பு என்று கூறி பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது ஏற்க முடியாதது.  எனவே, கட்டண மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

‘தாயகம்’                                         வைகோ
சென்னை - 8                          பொதுச்செயலாளர்,
19.01.2018                                மறுமலர்ச்சி தி.மு.க.,

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)