போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்திற்குத் தமிழக அரசே காரணம்! வைகோ கண்டனம்

விவகாரங்கள்: பொருளாதாரம், மனித உரிமை, சட்ட ஒழுங்கு, வறுமை, போக்குவரத்து

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 05/01/2018

 

 

 

 


போக்குவரத்துத் தொழிலாளர்கள்
போராட்டத்திற்குத் தமிழக அரசே காரணம்!

வைகோ கண்டனம்

மிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்திற்குத் தமிழக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் ஆகும்.

அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை சுமார் ரூ.6460 கோடியைக் கேட்டுப் பல கட்டங்களாகப் போராடி வந்தனர். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கெடுபிடி காட்டியதால்,  தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 7700 பேர்களுக்குச் சேரவேண்டிய 310 கோடி ரூபாய் பணிக்கொடை, 17600 பேர்களுக்கு 900 கோடி ரூபாய், 22045 பேர்களுக்கு சேரவேண்டிய விடுப்புச் சம்பளம் 100 கோடி ரூபாய், 11750 பேர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை ரூ.170 கோடி ஆக மொத்தம் 1480 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கின்றது.

பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் ரூ.210 கோடி, பஞ்சப்படி நிலுவைத் தொகை ரூ.40 கோடி, ஆக மொத்தம் ரூ.250 கோடியை தமிழக அரசு விடுவிக்கவில்லை. 

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ள, வருங்கால வைப்புநிதி, ஓய்வுதியத் திட்டம், கடன் சங்கம், எல்.ஐ.சி.வீட்டுக் கடன் திட்டம் மற்றும் பணிக்கொடை அறக்கட்டளை போன்றவற்றுக்குச் செலுத்த வேண்டிய ரூ.4730 கோடியைத் தமிழக அரசு வழங்கவில்லை.

ஆக மொத்தம் ரூ.6460 கோடி நிலுவையில் உள்ளது.

அதை வழங்குமாறு தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், தமிழக அரசு இதுவரை ரூ.1500 கோடி மட்டுமே வழங்கி இருக்கின்றது.

13 ஆவது ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் ஊதிய விகிதம் 2.57 விழுக்காடு காரணியாகக் கொண்டு ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்த வேண்டும்; குறைந்தபட்ச தர ஊதியமாக ரூ.2400 என்று வரையறுத்தால்தான், மத்திய அரசு வழங்கி உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.19500ஐ பெற முடியும் என்பதால், அதனையும் ரூ.1600 லிருந்து ரூ2400 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றார்கள்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வராமல் இனி பேச்சுவார்த்தையே  கிடையாது என்று மிரட்டும் தொனியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசுவது  நியாயம் அல்ல.

பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழலில், தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களுடன் உடனடியாகப் பேச்சு நடத்தி இணக்கமான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தாயகம்                                                                        வைகோ
சென்னை - 8                                                     பொதுச் செயலாளர்,
05.01.2018                                                              மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)