புத்தாண்டு வாழ்த்து! வைகோ

விவகாரங்கள்: சர்வதேசம், தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Sun, 31/12/2017


 

 

 

 

புத்தாண்டு  வாழ்த்து!

வைகோ

 

மிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாக காவிரி நதிநீர் உரிமைக்கு மத்திய அரசின் வஞ்சகப் போக்கால் அபாயமும், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தையும், நியூட்ரினோ நாசகாரத் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ள ஆபத்தான சூழலும் வளர்ந்துள்ள நிலையில், 2018 ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிறது.

அறிவும், ஆற்றலும் கொண்ட இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகள் இல்லை.

ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கி விடாமல், வாக்குரிமையைப் பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர் துன்பத்தை நீக்கும் விடியலான சுதந்திரத் தமிழ் ஈழம்எனும் இலக்கை அடைவதற்கு ஈழத்தமிழர்களிடமும், உலகெங்கும் வாழும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும் ஐ.நா. மன்றம் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலையை உருவாக்க சூளுரைப்போம்.

இருளுக்குப் பின் வெளிச்சம்; பனிக்காலத்திற்குப் பின்னர் வசந்தம் என்ற உணர்வோடு நம்பிக்கைக் கொண்டு தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தாயகம்                                                                              வைகோ
சென்னை - 8                                                           பொதுச் செயலாளர்,
31.12.2017                                                                    மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)