பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 10/07/2009

பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜூலை 9-ஆம் நாள் முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொது மக்களுக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பாலும் மோரும் உடம்புக்கு நல்லது. மதுபானம் உடல்நலத்துக்குக் கேடு.

ரூ. 10/- செலவில் தயாரிக்கக் கூடிய மதுபானத்தை பன்மடங்கு உயர்த்தி விற்பதற்கு அரசு ஆதரவு கொடுக்கிறது; நிலத்தடி நீரை எடுத்து ஒரு லிட்டருக்கு ரூ. 13/-க்கு விற்பனை செய்திட அரசு அனுமதிக்கிறது.

இதை ஒப்பிடும்போது பாலுக்குக் கொடுக்கின்ற விலை மிக மிகக் குறைவாகும். கறவை மாட்டுக்கான கலப்புத் தீவனங்கள், பசுந்தீவனங்கள் உள்பட இதர செலவினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மறுப்பதற்கு இல்லை. பால் உற்பத்திக்கான செலவைக் காட்டிலும் பாலின் கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு லிட்டர் பசும்பால் ரூ. 13/- ஆகவும், எருமைப் பால் ஒரு லிட்டர் ரூ. 18/- ஆகவும் உள்ளது. இந்த விலை பால் உற்பத்தியாளர்களுக்குக் கட்டுப்படியாகவில்லை. எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ. 20/- எனவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 30/- எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2/- ஊக்கத் தொகையாகக் கர்நாடக அரசு வழங்குவதைப் போல தமிழக அரசும் தர வேண்டும் என்றும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 22 ஆயிரம் பேர்களையும் பணி நிரந்தரம் செய்து முறையான ஊதியம் வழங்கிடவும் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் எழுப்பப்படும் கோரிக்கையை அரசு நிராகரிக்கக் கூடாது.

பால் உற்பத்தியாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொதுச் செயலாளர் வைகோ 07.07.2009 அன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)