நெய்வேலி தொழிலாளர்கள் பேராட்டம்: தீர்வு காண்க! வைகோ கோரிக்கை!
விவகாரங்கள்: பொருளாதாரம், திறன், தொழிலாளர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
நெய்வேலி தொழிலாளர்கள் பேராட்டம்:
தீர்வு காண்க!
வைகோ கோரிக்கை!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 30 ஆம் தேதி, இரவுப் பணியில் இருந்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நான்கு நாட்களாகப் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஆகியோரைக் கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படவில்லை.
இன்று 3 ஆம் தேதி முதல், அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து உண்ணாநிலை அறப்போராட்டத்தையும் அறிவித்து உள்ளனர். என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால், மின் உற்பத்தி குறைந்து, தமிழகம் இருளில் தவிக்கும் நிலை எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்தை, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம், அலட்சியப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் கொந்தளித்து உள்ளனர்.
எனவே, மத்திய அரசு, உடனடியாகத் தலையிட்டு, என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காணவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வைகோ
\பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.07.2010