தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை-இந்திய அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்! ஜூலை 14 சென்னை ஜூலை 16 வேதாரண்யம் வைகோ அறிக்கை!

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: நாகப்பட்டினம்

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Fri, 09/07/2010

தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை-இந்திய அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!
ஜூலை 14 சென்னை
ஜூலை 16 வேதாரண்யம்
வைகோ அறிக்கை!

தமிழக மீனவர்கள் வேதாரண்யத்துக்கு அருகில், ஆறுகாட்டுத்துறைக்கும், உப்புத்துறைக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, சிங்களக் கடற்படையினர்,துப்பாக்கிகளில் சுட்டவாறு சுற்றி வளைத்து, நம் மீனவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், தமிழக மீனவர் செல்லப்பன், படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அதைப்போலவே, அறிவழகன் என்பவரின் படகுக்கு உள்ளே சிங்களவர்கள் நுழைந்து, தமிழக மீனவர்களை மிருகத்தனமாகத் தாக்கி, ஆடைகளை அவிழ்த்து விரட்டி அடித்து உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில், ஆயிரம் முறை சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக் கொன்று உள்ளனர். வலைகளை அறுத்து, படகுகளை உடைப்பதும் மட்டும் அல்லாது, நமது மீனவர்களை அம்மணமாக்கி இழிவுபடுத்திச் சித்திரவதை செய்வது, சிங்களவர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது.


இதற்கு முன்பும், இராமே
ஸ்வரம் பாம்பன் மீனவர்களை, கண்மண் தெரியாமல் சிங்களக் கடற்படையினர் தாக்கி, அவர்களது ஆடைகளைப் பிடுங்கிக் கடலில் வீசி, அடித்து விரட்டினர். பிடித்த மீன்களைப் பதப்படுத்திக் கொண்டு வருவதற்காக எடுத்துச் சென்ற ஐஸ்கட்டிகளைச் சுற்றி இருந்த கித்தான் சாக்குகளை இடுப்பில் கட்டிக்கொண்டு, கரைக்குத் திரும்பிய அவலம் நேர்ந்தது.


இலங்கைத் தீவில் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களை, இலட்சக்கணக்கில் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த சிங்கள வெறியர்கள், தமிழ்ப்பெண்களின் கற்பைச் சூறையாடுவதும், போர்க்களத்தில், விடுதலைப்புலி வீராங்கனைகளின் உயிரற்ற சடலங்களைக்கூட அம்மணமாக்கி, மிருகங்கள் செய்யத் துணியாத இழிசெயலைச் செய்ததும், ஈழத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டிச் சுட்டுக் கொன்றதும், சிங்கள வெறிநாய்களின் வக்கிர குணம் ஆகும்.


உலகில் இத்தகைய துன்பமும், இழிவும் எந்த இனத்துக்கும் நேர்ந்தது இல்லை. அதே வக்கிர புத்தியோடுதான், தமிழக மீனவர்களையும் இழிவுபடுத்திக் கொல்கிறார்கள். ஈழத்தமிழர்களின் இரத்தபந்த உறவுகள் ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்கிற பயம் துளியும் இல்லாமல், தமிழக மீனவர்களையே திரும்பத்திரும்பத் தாக்குவதற்கும், சாகடிப்பதற்கும், சிங்கள அரசுக்கு எப்படித் துணிவு வந்தது?


எல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற தைரியம். இருநாட்டுக் கடற்படைகளின் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்ட இந்திய அரசு, நமது கடல் எல்லையிலேயே சிங்களக் கடற்படை கண்ணி வெடிகளை வைக்க அனுமதித்த மானங்கெட்ட இந்திய அரசு, கொலைபாதகன் ராஜபக்சேவை வரவேற்று, அவனிடம் பல் இளித்து உபசரித்து, இப்போதும் இருநாட்டுக் கடற்படைகள் இணைந்து செயல்பட மேலும் ஒரு ஒப்பந்தம் போட்டு உள்ள இந்திய அரசுதான், தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளி ஆகும். இந்தியக் கடற்படைத் தளபதிகள் கொழும்பு செல்வதும், விருந்து கேளிக்கைகளில் திளைப்பதும், கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாகி விட்டது.


நேற்று முன்தினம் சிங்களக் கடற்படை, நமது மீனவர்களைத் தாக்கிக் கொன்றதைக் கூட மறுத்து, இந்தியக் கடற்படை கிழக்குப் பிராந்தியத் தளபதி இராஜசேகரன் என்பவர், ‘இலங்கைக் கடற்படையினர் தாக்குவது இல்லை; நமது மீனவர்கள்தான் அத்துமீறிச் சென்று பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள்’ என்று, எகத்தாளமாகக் கூறி உள்ளார்.
ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து, சிங்கள இராணுவத்தின் போர்குற்றங்களை விசாரித்து அறிய, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்த மூவர் குழுவை, இரத்துச் செய்ய வேண்டும் என்று கூக்குரல் இட்டு, ராஜபக்சேயின் கைத்தடியான அமைச்சர் விமல் வீரவன்ச, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகை இட்டு, ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டனர். ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை, விபச்சாரத்துக்குக் கூட்டிக் கொடுக்கின்ற புரோக்கர் என்று இழிவுபடுத்தி எழுதிய பேனர்களைக் காட்டியவாறு, அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இரத்த வெறி கொண்ட சிங்கள புத்த பிக்குகள் உடன் இருக்க, கலவரம் செய்தனர்.


‘ஐ.நா. அலுவலகம் கொழும்பில் மூடப்பட்டது; ஐ.நா.வின் அதிகாரியைத் திரும்பப் பெறுகிறோம்’ என்றும், பான் கி மூன் அறிவித்து விட்டார்.
ராஜபக்சே கூட்டத்தின், கோர முகம் உலகத்துக்கு அம்பலமாகி விட்டது. இத்தனைக்குப் பிறகும், தன்மான உணர்வு உள்ள தமிழர்கள் பொறுமை காட்டினால், வரலாறே நம்மைப் பழிக்கும்.


சென்னையில்....


சிங்களக் கொடியோரின் கொட்டத்தை ஒடுக்க, சொரணை கெட்ட பிண்டங்கள் அல்ல தமிழர்கள் என்பதை உணர்த்த,
சென்னையில் உள்ள சிங்களத் துணைத்
தூதரகத்தை, நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்; துணைத்தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை-இந்திய அரசுகளைக் கண்டித்தும்,


ஜூலை 14 ஆம் நாள், புதன்கிழமை அன்று, தலைநகர் சென்னையில், இலங்கைத்
தூதகரத்துக்கு எதிரே, இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.


வேதாரண்யத்தில்...


தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொலை செய்யும் இலங்கை அரசையும், அதற்குத் துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஜூலை 16 ஆம் நாள், வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில், என்னுடைய தலைமையில், வேதாரண்யத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)