தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது! ஓவியர் வீரசந்தனம் மறைவுக்கு வைகோ இரங்கல்

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Thu, 13/07/2017

 

 

 

 


தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது!

ஓவியர் வீரசந்தனம் மறைவுக்கு வைகோ இரங்கல்

நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீரசந்தனம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது! 43 ஆண்டுகளாக தன் வாழ்வையே சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்காகவே அர்ப்பணித்தவர்.

நான் நெஞ்சால் பூசிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் எல்லையற்ற அன்பையும், மதிப்பையும் பெற்று அவருடன் உயிராகப் பழகியவர் நமது இலட்சிய ஓவியர்.

அதற்கான அனைத்து அறப்போராட்டங்களிலும் முன்நின்றவர். உடல் நலிந்த நிலையிலும் தமிழ்க்குலத்துக்காக வீர முழக்கம் எழுப்பியவர்.

தலைசிறந்த ஓவியர். ஆனால் அவர் கரம் பற்றிய தூரிகை தமிழின விடுதலைக்காகவே ஓவியங்களைத் தீட்டியது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு உயிரோவியங்களை வரைந்தார்.

நேற்று முன்தினம் காலையில் நெடுநேரம் என்னிடம் அலைபேசியில் உரையாடினார். அவரது மறைவு தமிழ் இனத்துக்கும், தமிழ் ஈழ மக்களுக்கும் ஈடு செய்யவே முடியாத இழப்பாகும்.

தமிழ் இன விடுதலைக்காக வாழ்ந்த அந்த ஒளிச்சுடர் அணைந்துவிட்டது. அவரது இதய தாகமான இலட்சியங்களை நெஞ்சில் ஏந்துவோம்!

எனது ஆருயிர்ச் சகோதரன் ஓவியர் வீரசந்தனத்திற்கு வீர வணக்கத்தையும், பொங்கி வரும் கண்ணீரையும் அஞ்சலி ஆக்குகிறேன்.


தாயகம்                                                                    வைகோ
சென்னை - 8                                                  பொதுச்செயலாளர்
13.07.2017                                                          மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)