கழகப் பொதுச்செயலாளர், தலைமை நிர்வாகிகள் சுற்றுப்பயணம்...

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், தமிழ்நாடு

செய்தித்துறை: அறிவிப்புகள்

Date: 
Fri, 19/06/2009

மே 24 ஆம் நாள், சென்னை தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், கழகத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்த, பழைய உறுப்பினர்களைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர் சேர்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜூலை 1 ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கும் பணிகளைத் தொடங்கி, ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை நிறைவு செய்யவும்; செப்டெம்பர் 15 ஆம் தேதி முதல், கிளைக்கழகத் தேர்தல்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்பாக, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், தலைமை நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டங்களில் பங்கு ஏற்று, உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கீழ்க்காணும் நாள்களில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன், மறுமலர்ச்சித் தொழிலாளர் முன்னணிப் பொதுச்செயலாளர் திருப்பூர் சு. துரைசாமி, கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். செயல்வீரர் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூன்

19 காலை -திருவண்ணாமலை மாவட்டம் மாலை கிருஷ்ணகிரி மாவட்டம்

20 காலை -தருமபுரி மாவட்டம் -மாலை சேலம் மாவட்டம்

21 காலை -நாமக்கல் மாவட்டம் -மாலை ஈரோடு மாவட்டம்

22 காலை -நீலகிரி மாவட்டம்

23 காலை -திண்டுக்கல் மாவட்டம், -மாலை தேனி மாவட்டம்

24 மாலை -கன்னியாகுமரி மாவட்டம்

26 மாலை -நாகப்பட்டினம்\ மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்

27 காலை -கோவை மாநகர், புறநகர் மாவட்டம்

28 மாலை -விழுப்புரம் மாவட்டம்

29 காலை -வேலூர் கிழக்கு மாவட்டம் -மாலை வேலூர் மேற்கு மாவட்டம்

30 மாலை -காஞ்சிபுரம் மாவட்டம்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)