தமிழை வழக்கு மொழி ஆக்கிடுவீர்! வழக்கறிஞர்கள் உண்ணாநிலை - ம.தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை!
விவகாரங்கள்: தேசிய
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: பத்திரிகை அறிக்கைகள்
தமிழை வழக்கு மொழி ஆக்கிடுவீர்!
வழக்கறிஞர்கள் உண்ணாநிலை - ம.தி.மு.க. ஆதரவு!
வைகோ அறிக்கை!
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் பகவத்சிங், நடராஜன், ராஜா, ராஜேந்திரன், எழிலரசு, பாரதி ஆகியோர், தமிழை உயர் நீதிமன்ற அலுவலக மொழியாக ஆக்கிடவும், தமிழில் வழக்காடும் உரிமை கோரியும் சாகும்வரை உண்ணாநோன்பு மேற்கொண்டு உள்ளனர். இந்த உண்ணாவிரதம், ஆறாவது நாளாகத் தொடர்கிறது. அவர்களது கோரிக்கை நியாயமானது; மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கிறது.
அவர்களது கோரிக்கை வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறது.
தமிழை, நடுவண் அரசின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும் ஆக்கிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஏழு கோடித் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டிடும் வகையில், உடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

