இராஜபக்சேவின் வருகையை எதிர்த்து திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்! வைகோ அறிவிப்பு

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள்

Date: 
Mon, 07/06/2010

இராஜபக்சேவின் வருகையை எதிர்த்து
திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
வைகோ அறிவிப்ப

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவுஇரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை அதிபர் கொடியவன் மகிந்த இராஜபக்சே தமிழர்களின் இரத்தம்தோய்ந்த கரங்களோடு இந்தியாவுக்கு வருகிறான். தமிழ் இனக்கொலைக்கு ஆயுதங்களும் ஆயிரம் கோடி ரூபாய் பணமும் கொடுத்து தமிழர் அழிப்பு யுத்தத்தை உடன் இருந்து இயக்கிய இந்திய அரசு அக்கொலைபாதகனை திருப்பதிக்கு வரவழைத்து பூரணகும்ப வரவேற்பு வழங்கிடச் செய்து தரணிஎங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தில் தணலைக் கொட்டியது.


தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழ் மக்களை கொன்று ஒழித்த கொடியவன் ராஜபக்சே, தமிழர் பகுதிகளில் சிங்கள்குடியேற்றம் நடத்தி ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தை அடியோடு அழித்திட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறான். அந்த மாபாவியை இந்திய அரசு வரவேற்பது தமிழர்கள் ஒருநாளும் மன்னிக்கமுடியாத துரோகமாகும். இந்நிலையில் இந்திய அரசின் வரவேற்பில் பங்கெடுக்கும் விதமாகவும், ராஜபக்சே வருகையை ஆதரிக்கும் விதமாகவும் தி.மு.க. உள்ளிட்ட ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சேவைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப் போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்து இருப்பது ஏற்கனவே தமிழ் இனத்துக்கு செய்துவரும் துரோகத்தினை தொடர்ந்திடும் அநீதியாகும்.

ஆனால், அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பைக் காட்டவும், இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும் காவல்துறை அனுமதி மறுத்தாலும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் திட்டமிட்டவாறு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மாநிலம் எங்கும் நடைபெறும். தலைநகர் சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, மயிலாப்பூர் நாகேÞவர ராவ் பூங்கா அருகில் இருந்து தோழர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். எனவே, அறப்போரில் கலந்து கொள்ளும் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் நாளை ஜூன் 8, செவ்வாய் கிழமை காலை 10 மணி அளவில், நாகேÞவர ராவ் பூங்கா அருகில் திரளுமாறு வேண்டுகிறேன்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)