நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் .வைகோ
விவகாரங்கள்: மனித உரிமை, அரசியல், இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள், சொற்பொழிவுகள்
திருச்சியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ ,மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
"இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இதுவரை தமிழகத்தில் 9 பேர் தீக்குளித்து உயிரிழந்திருக்கின்றனர் .அவர்களில் இருவர் திமுகவினர் .யாராவது ஒருவருக்காவது இரங்கல் தெரிவித்தாரா கருணாநிதி .
பிரணாப் இறங்கி வந்திருக்கிறார் என்பதில் உண்மையில்லை .முல்லைத்தீவில் 70 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் .அவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி விட்டனர் என்று பொய்யைப் பரப்புகின்றனர் .கொத்து கொத்தாக குண்டுகளை வீசி தமிழர்களை கொல்வதற்காக எண்ணிக்கையை குறைத்துச் சொல்லும் சதி இது .
இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று இந்தியா கோராததால் ,அங்கு நடைபெறுவது இனப்படுகொலையல்ல என்று உலக நாடுகள் கருதுகின்றன .எனவே 2,3 கோடி கையெழுத்து பெற்றுத் தாருங்கள் ,அவற்றை உலக நாடுகளுக்கு அளிப்போம் .அப்போதாவது இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பது உலக நாடுகளுக்குத் தெரியட்டும்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் சேர்ந்து வரும் அத்தனை கட்சிகளையும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற விடக்கூடாது .இது நடக்கும் .மத்தியில் காங்கிரஸ் தவிர யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். "
வைகோ

