பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.வுக்குத் தோல்வியே! வைகோ கருத்து!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தர்மபுரி, தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Wed, 31/03/2010

பென்னாகரம் தொகுதியில் தி.மு.க.வுக்குத் தோல்வியே! வைகோ கருத்து!


பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் தி.மு.க. ஊழல் பணத்தில் 60 கோடிக்கு மேல் செலவிட்டு, ஓட்டுக்கு ரூ 3000 என காவல்துறையின் உதவியோடு வினியோகித்து, அமைச்சர் பட்டாளமே முகாமிட்டு, முதல் அமைச்சரே பிரச்சாரம் செய்தும்கூட, உண்மையில் அவர்கள் வெற்றிபெறவில்லை.


ஏனெனில், இத்தனைக்குப் பிறகும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகளைவிட, மொத்தத்தில் எதிர்த்து விழுந்த வாக்குகளே அதிகம் ஆகும்.


எனவே, இதைத் தங்கள் சாதனைக்குக் கிடைத்த வெற்றி என்று, தி.மு.க. தம்பட்டம் அடிப்பது உண்மை அல்ல.


மக்கள் மன்றத்தில், தி.மு.க. அரசுக்கு ஆதரவைவிட, எதிர்ப்பே அதிகம் என்பதையே, பென்னாகரம் தேர்தல் முடிவு காட்டுகிறது.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)