"உலகத் தமிழர்களின் தலைவராக" அவரை நாங்கள் முடிசூடி நீண்ட நாட்கள் ஆகின்றன.

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: அபிப்ராயம்

Date: 
Tue, 12/05/2009

தங்கள் பதில் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

அரபு நாடுகளில் இணையத்தில் பல இணைய தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளதால் எங்களுக்கு சரியான செய்திகள் கிடைப்பதில்லை. தினமலர் போன்ற சிங்கள பத்திரிகைகளை படிக்க வெறுப்பாக இருக்கிறது.

விடிகிற பொழுதாவது ஈழ தமிழர்களின் வாழ்வில் நல்ல பொழுதாக விடியாதா? என்ற ஏக்கத்துடன் உறங்கப் போகும் எம் போன்ற பல தேசங்களில் பரவிக் கிடக்கும் தமிழர்கள் நிம்மதியான உறக்கம் கண்டு பல திங்கள் ஆகி விட்டன. எம் நெஞ்சக் குமுறலை வைகோ என்கின்ற உலகத் தமிழன் நாடு முழுதும் எதிரொலிக்கிறார் என்கிற செய்தியை கேட்கிற போது கிடக்கும் மன நிம்மதியில் சில மணி நேரம் உறங்குகின்றோம்.

அவரிடம் சொல்லுங்கள் "உலகத் தமிழர்களின் தலைவராக" அவரை நாங்கள் முடிசூடி நீண்ட நாட்கள் ஆகின்றன. அயல் தேச மண்ணிலே அனாதைகளாக செத்துப் போகின்ற தமிழர்களுக்கு தன் நெஞ்சார கண்ணீர் வடிகின்ற வைகோ தான் எங்களது வழிகாட்டி ..... பணம், பதவி, பட்டம், மாலை, மரியாதை இவை எதையும் விரும்பாத கோடிக் கணக்கானோர் வைகோவின் விசுவாசிகள் என்று.

இன்று கனடாவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ, அரபு தேசங்களிலோ உள்ள கோடிக் கணக்கான தமிழர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் வைகோ படுத்துக்கொண்டே ஜெயிப்பார். தன்னிகரற்ற தமிழக முதல்வரும் ஆவார்.
அந்த உலகத் தமிழர் அனைவரும் வாக்களிக்கும் வைபவத்தில் கருணாநிதி வகையறா வேட்புமனு கூட தாக்கல் செய்ய முடியாது.

வரும் காலத்தில் இனி எந்த தமிழனும் தனது சந்ததியினருக்கு "கருணா" என்றோ "கருணாநிதி" என்றோ பெயர் வைக்கவே மாட்டான். நாளை தன் சந்ததியினரை துரோகியின் பெயர் சூடி இருக்கின்றான் என தமிழ் உலகம் தூற்றுமே என அச்சபடுவான். "கருணா" மற்றும் "கருணாநிதி" ஆகியோர் தங்கள் பெயர்களை தமிழக வரலாற்றில் "எட்டப்பன்" பெயருக்கு அடுத்த இடத்தில் தாங்களாகவே பொரித்துக்கொண்டர்கள்

தன் சொந்த சகோதரனைக் கொன்ற எதிரியின் வீட்டு விருந்தில், வீதியில் வீசி எறியப்பட எச்சில் இலைக்காக போட்டி போடும் நாயை போன்றவர்கள் இந்த "கருணா வகையறா"- வினர். தமிழின வரலாறு இவர்களை இழி மக்கள் என தூற்றும்.

தமிழை, தமிழரை நேசிக்கும் வைகோவிற்கு தமிழ் தாய் நீண்ட ஆயுளையும் உடல் நலத்தினையும் கொடுப்பாள்.

எனது பின்னணி குரலுடன் சில காணொளி காட்சிகளை you tube - ல் வெளியிட்டு இருக்கிறேன். அவற்றினைக் காண கீழ்கண்ட தொடர்பினை சொடுக்கவும்.

நன்றியுடன்
ஜனார்த்தனன் சிதம்பரம்
சார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகம்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)